Commonwealth games: தந்தை இறந்தது தெரியாமல் பாக்ஸிங்கில் தங்கம் வென்ற வீராங்கனை
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முந்தைய நாள் அவரது தந்தை இறந்துபோன நிலையில் அதுபற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை லேகப்பிரியா
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் பளு தூக்குதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அமைந்திருக்கும் கல்லூகாரன்பட்டியை சேர்ந்த லோக பிரியா என்பவரும் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து நேற்று நடைபெற்று போட்டியில் ஜூனியர் பெண்கள் 52 கிலோ எடைப்பிரிவில் 350 கிலோ வரை பளு தூக்கி தங்க பதக்கம் வென்றார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவித்த லோக பிரியாவுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது.
லோக பிரியாவின் தந்தை செல்வமுத்து கடந்த புதன்கிழமையன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அன்றைய நாள் இரவே அவரது சொந்த ஊரான கல்லூக்காரன்பட்டியில் இறுதி சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டன.
