Today Olympic medal list: டாப் 10 லிஸ்ட்டில் முன்னேறிய நாடு.. 69வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. மேலும் விவரம் உள்ளே-the country that advanced in the top 10 list india was pushed to 69th place more details - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Today Olympic Medal List: டாப் 10 லிஸ்ட்டில் முன்னேறிய நாடு.. 69வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. மேலும் விவரம் உள்ளே

Today Olympic medal list: டாப் 10 லிஸ்ட்டில் முன்னேறிய நாடு.. 69வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. மேலும் விவரம் உள்ளே

Manigandan K T HT Tamil
Aug 08, 2024 05:40 PM IST

Olympic 2024 medal list today: ஆகஸ்ட் 8 வியாழக்கிழமைக்கான மொத்த பதக்க எண்ணிக்கை இதோ. பதக்க பட்டியலில் முதல் 10 நாடுகள் இங்கே.

Today Olympic medal list: டாப் 10 லிஸ்ட்டில் முன்னேறிய நாடு.. 69வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. மேலும் விவரம் உள்ளே REUTERS/Kim Kyung-Hoon
Today Olympic medal list: டாப் 10 லிஸ்ட்டில் முன்னேறிய நாடு.. 69வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. மேலும் விவரம் உள்ளே REUTERS/Kim Kyung-Hoon (REUTERS)

2024 கோடைகால ஒலிம்பிக்ஸ், அதிகாரப்பூர்வமாக XXXIII ஒலிம்பியாட் விளையாட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் 2024 என அழைக்கப்படுகிறது.பிரான்சில் ஜூலை 26 (தொடக்க விழா தேதி) முதல் ஆகஸ்ட் 11, 2024 வரை நடைபெறுகிறது. பாரிஸ் போட்டியை நடத்தும் நகரமாகும், மெட்ரோபொலிட்டன் பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ள மற்ற 16 நகரங்களில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

மொத்த பதக்க எண்ணிக்கை

ஆகஸ்ட் 8 வியாழக்கிழமைக்கான மொத்த பதக்க எண்ணிக்கை இதோ.

பதக்க பட்டியலில் முதல் 10 நாடுகள் இங்கே:

அமெரிக்கா — 95 (27 தங்கம், 35 வெள்ளி, 33 வெண்கலம்)

சீனா - 67 (26 தங்கம், 24 வெள்ளி, 17 வெண்கலம்)

ஆஸ்திரேலியா - 42 (18 தங்கம், 13 வெள்ளி, 11 வெண்கலம்)

பிரான்ஸ் - 51 (13 தங்கம், 17 வெள்ளி, 21 வெண்கலம்)

கிரேட் பிரிட்டன் - 49 (12 தங்கம், 17 வெள்ளி, 20 வெண்கலம்)

தென் கொரியா - 27 (12 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம்)

ஜப்பான் - 32 (12 தங்கம், 7 வெள்ளி, 13 வெண்கலம்)

இத்தாலி -30 (10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம்)

நெதர்லாந்து - 19 (10 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்)

ஜெர்மனி - 19 (8 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம்)

இந்தியா 69 வது இடத்தில் உள்ளது. இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது.

பைனலில் நீரஜ்

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பைனலுக்கு செல்ல இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு த்ரோ மட்டுமே தேவைப்பட்டது. இன்று பைனல் போட்டி நடைபெறவுள்ளது.

அவர் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது.

இதனிடையே, மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்து உள்ளார்.

தனது சமூகவலைத்தள கணக்கு மூலம் ஓய்வை அறித்து உள்ள வினேஷ் போகத், "மல்யுத்தத்தில் என்னை எதிர்த்து வென்றேன், நான் தோற்றேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் சிதறடிக்கப்பட்டது. இனி எனக்கு எந்த வலிமையும் இல்லை, தயவுசெய்து அனைவரும் என்னை மன்னியுங்கள்” என தெரிவித்து உள்ளார்.

29 வயதான வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.

பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இருந்த நிலையில் அதிக எடை இருந்ததன் காரணமாக மல்யுத்த இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பட்டினி கிடப்பது, தண்ணீர் உள்ளிட்ட திரவ பொருட்களை தவிர்ப்பது மற்றும் இரவு முழுவதும் விழித்திருந்து வியர்வையை வெளியேற்றுவது உள்ளிட்ட தீவிரமான எடை குறைப்பு நடவடிக்கைகளில் வினேஷ் போகத் ஈடுபட்டாலும் அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.