T20 World Cup 2024: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  T20 World Cup 2024: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

T20 World Cup 2024: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Karthikeyan S HT Tamil
Jun 30, 2024 11:51 AM IST

T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

T20 World Cup 2024: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
T20 World Cup 2024: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு! (File)

கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவையும், பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் அதிகம் பேசினார்.

தொலைபேசி அழைப்பின் போது, இந்திய கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பங்களிப்புகளுக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசியாக கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 11 ஆண்டுகால காத்திருப்புக்கு விடை கொடுத்துள்ளது.

முன்னதாக, ஐசிசி டி 20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரின் டெத் பந்துவீச்சின் சிறந்த காட்சி மற்றும் விராட் கோலி மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் அற்புதமான ஆட்டங்கள் இந்தியா ஐசிசி கோப்பை கைப்பற்ற உதவியது. சனிக்கிழமை பார்படாஸில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக ஐசிசி டி 20 உலகக் கோப்பை பட்டத்தை இந்தியா வென்று சாதனை படைத்தது.

 

வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ செய்தியில், “இந்த மகத்தான வெற்றிக்காக ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இன்று, உங்களின் அற்புதமான செயல்பாட்டால் 1.40 கோடி இந்தியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். நீங்கள் அனைவரும் உலகக் கோப்பையை வென்றுள்ளீர்கள், ஆனால் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும், தெருக்களிலும், சமூகங்களிலும் நீங்கள் நாட்டு மக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள். இந்த வெற்றி ஒரு சிறப்பு காரணத்திற்காக நினைவுகூரப்படும். எத்தனையோ அணிகள் இருந்தாலும் இந்தியா தோற்கடிக்கப்படவில்லை. இது ஒரு சிறிய சாதனை அல்ல. விளையாட்டின் ஜாம்பவான்கள் வீசிய ஒவ்வொரு பந்தையும் நீங்கள் விளையாடி வெற்றி பெற்றீர்கள். தோல்வியடையாத இந்த ஓட்டம் உங்கள் மன உறுதியை அதிகரித்தது மற்றும் போட்டியை சுவாரஸ்யமாக வைத்திருந்தது. என் தரப்பில் இருந்து நிறைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.