ICC T20 Ranking: ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவின் சாதனை!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Icc T20 Ranking: ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவின் சாதனை!

ICC T20 Ranking: ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவின் சாதனை!

Manigandan K T HT Tamil
Jan 13, 2023 10:36 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்ய குமார் யாதவ் 908 புள்ளிகளுடன் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இலங்கைக்கு எதிராக 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ்
இலங்கைக்கு எதிராக 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் (ANI)

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்ய குமார் யாதவ் 908 புள்ளிகளுடன் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இரண்டாவது டி20 ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசினார்.

மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் சதம் விளாசினார். இதன்மூலம் அவர் ஐசிசி டி20 தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் மலான் 915 புள்ளிகள் வரை பெற்று ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார். தற்போது அவர் 719 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

டேவிட் மலான்
டேவிட் மலான் (ANI)

டெஸ்டில் சூர்யகுமார் யாதவ்?

டேவிட் மலானின் சாதனையை முறியடிக்கவோ சமன் செய்யவோ முடியவில்லை என்றாலும், சூர்யகுமார் யாதவ் டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும்தான் விளையாடும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இப்போது இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்கில் 99 புள்ளிகளுடன் 58.93% என்று 2ம் இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் இலங்கை, 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. எனவே ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான இறுதிப் போட்டிக்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

சாலை விபத்தில் ரிஷப் பண்ட் காயமடைந்திருப்பது இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருக்கிறது. அவரது வெற்றிடத்தைப் போக்க சூர்யகுமார் யாதவை அணியில் கொண்டு வருவது குறித்து தேர்வு குழு யோசிக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.