Sumit Nagal: 10 நாள்களில் 8 வெற்றிகள்..! பெருகியா சேலஞ்சர்ஸ் அரையிறுதியில் சுமித் நாகல்
ஆறாவது நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகல், போலந்து நாட்டின் தரவரிசை பெறாத மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கியை காலிறுதியில் வீழ்த்தி பெருகியா சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கடந்த 10 நாள்களில் 8 வெற்றிகள் பெற்றிருக்கிறார் சுமித் நாகல்.

இத்தாலி நாட்டின் பெருகியா நகரில் கடந்த 2015 முதல் பெருகியா சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. வெளிப்புறத்தில் செம்மண் மைதானத்தில் நடைபெறும் போட்டியாக இந்த தொடர் அமைந்துள்ளது.
அரையிறுதியில் இந்திய வீர்ர சுமித் நாகல்
இதையடுத்து இந்த தொடரின் காலிறுதி போட்டி இந்தியாவின் ஆறாவது நிலை வீரரான சுமித் நாகல், போலாந்து நாட்டின் தரவரிசை பெறாத மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கி ஆகியோருக்கு எதிராக நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். சுமார் 55 நிமிடங்கள் வரை இந்த போட்டியானது நடைபெற்றது.
அத்துடன் சுமித் நாகலுக்கு இது எட்டாவது தொடர் வெற்றியாக அமைந்துள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைய்ப்ரான் சேலஞ்சர் தொடரில் பெற்ற வெற்றியில் இருந்து சுமித் நாகல் வெற்றி பயணமானது தொடர்ந்து வருகிறது.