Prabath Jayasuriya: டெஸ்ட் கிரிக்கெட்.. 72 ஆண்டுகள் சாதனையை முறியடித்த இலங்கை வீரர் ஜெயசூர்யா!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Prabath Jayasuriya: டெஸ்ட் கிரிக்கெட்.. 72 ஆண்டுகள் சாதனையை முறியடித்த இலங்கை வீரர் ஜெயசூர்யா!

Prabath Jayasuriya: டெஸ்ட் கிரிக்கெட்.. 72 ஆண்டுகள் சாதனையை முறியடித்த இலங்கை வீரர் ஜெயசூர்யா!

Karthikeyan S HT Tamil
Apr 29, 2023 01:45 PM IST

Prabath Jayasuriya: இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா விரைவாக 50 விக்கெட்களை வீழ்த்தி 72 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரபாத் ஜெயசூர்யா
பிரபாத் ஜெயசூர்யா

இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா இந்த புதிய சாதனையை காலேவில் நடைபெற்று வந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் நிகழ்த்தினார். அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங்கை ஆட்டமிழக்கச் செய்த போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 50 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார் பிரபாத் ஜெயசூர்யா.

31 வயதான பிரபாத் ஜெயசூர்யா தனது 7-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 72 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற பெருமை பிராபாத் ஜெயசூர்யாவுக்கு கிடைத்துள்ளது. 

ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர், இலங்கை அணிக்காக அதிவேகமாக டெஸ்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1951-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் 8 போட்டிகளில் 50 விக்கெட்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் அரங்கில் விரைவாக 50 விக்கெட்களை கைப்பற்றியவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சார்லி டர்னர் முதலிடத்தில் உள்ளார். அவர், 1888-ம் ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். இந்த வகை சாதனையில் பிரபாத் ஜெயசூர்யா 2-வது இடத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் ரிச்சர்ட்சன், தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்களும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.