HT Sports SPL: சிஎஸ்கே அணிக்காக அதிக ஸ்கோர்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள் யார் யார் தெரியுமா?
Chennai Super Kings: சிஎஸ்கே ஓபனிங் பேட்ஸ்மேனான டெவன் கான்வே 16 ஆட்டங்களில் விளையாடி 672 ரன்களை குவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 2023 சீசனில் இதுவரை அதிக ஸ்கோரை சிஎஸ்கே அணிக்காக விளாசிய டாப் 5 வீரர்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த சீசனில் 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சிஎஸ்கே அசத்தியது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ரன்னர்-அப் ஆனது.
சாம்பியன் அணியான தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இந்த முறை அதிக ரன்களை அந்த அணிக்காக அடித்துக் கொடுத்த 5 பிளேயர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
டெவன் கான்வே
சிஎஸ்கே ஓபனிங் பேட்ஸ்மேனான டெவன் கான்வே 16 ஆட்டங்களில் விளையாடி 672 ரன்களை குவித்தார். இவரது ஸ்டிரைக் ரேட் 139.71 ஆகும். மொத்தம் 77 ஃபோர்ஸ், 18 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். 6 அரை சதங்களை விளாசியிருக்கும் டெவன் கான்வே ஒரு சதம் கூட விளாசமல் போனது சோகமே. கான்வே, நியூசிலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கு தற்போது 31 வயது ஆகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கேவுக்காக மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனாக கான்வேயுடன் இணைந்து விளையாடியவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் 16 ஆட்டங்களில் விளையாடி 590 ரன்களை குவித்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 147.5. மொத்தம் 46 பவுண்டரிகளையும், 30 சிக்ஸர்களையும் இந்த சீசனில் விளைசியிருக்கிறார் கெய்க்வாட். 4 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ்.
ஷிவம் துபே
இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு தொடக்க வரிசை பேட்டிங்கில் பக்கபலமாக இருந்தவர் ஷிவம் துபே. இவர் மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடி 418 ரன்களை எடுத்திருக்கிறார். 12 பவுண்டரிகள், 35 சிக்ஸர்களை விளாசியிருக்கும் அவர், 3 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர்.
அஜிங்க்ய ரஹானே
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரஹானே, 16 போட்டிகளில் விளையாடி 326 ரன்களை விளாசினார். ஸ்டிரைக் ரேட் 172.49 ஆகும். இவர் 24 ஃபோர்ஸையும், 16 சிக்ஸர்களையும் விரட்டியிருக்கிறார். மொத்தம் 2 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு அரை சதம் மும்பை அணிக்கு எதிராக 19 பந்துகளில் எடுத்தது ஆகும்.
ரவீந்திர ஜடேஜா
இந்த வரிசையில் 5வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். இவர் மொத்தம் 158 ரன்களே இந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக விளாசியிருந்தாலும், கடைசி ஆட்டத்தில் கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டியதே மிகப் பெரிய ஸ்கோராக ஐபிஎல் வரலாற்றில் பதிந்திருக்கும். ஏனென்றால் அந்த 10 ரன்களை அவர் 2 பந்துகளில் விளாசியதன் காரணமாகவே சிஎஸ்கே சாம்பியன் ஆனது. இவரது ஸ்டிரைக் ரேட் 142.86. மொத்தம் 11 ஃபோர்ஸ், 9 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜடேஜா, இந்த சீசனில் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா, குஜராத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த சீசல் ஐபிஎல் உடன் ஓய்வு பெற்றுவிட்ட அம்பதி ராயுடு (158 ரன்கள்), மொயீன் அலி (124 ரன்கள்), கேப்டன் எம்.எஸ்.தோனி (104 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டாபிக்ஸ்