Sports Rewind 2024: டி20 உலகக் கோப்பை தட்டித் தூக்கியது முதல் குகேஷ் சாம்பியன் ஆனது வரை.. ஓர் கண்ணோட்டம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sports Rewind 2024: டி20 உலகக் கோப்பை தட்டித் தூக்கியது முதல் குகேஷ் சாம்பியன் ஆனது வரை.. ஓர் கண்ணோட்டம்

Sports Rewind 2024: டி20 உலகக் கோப்பை தட்டித் தூக்கியது முதல் குகேஷ் சாம்பியன் ஆனது வரை.. ஓர் கண்ணோட்டம்

Manigandan K T HT Tamil
Dec 31, 2024 06:00 AM IST

டிசம்பர் மாத தொடக்கத்தில் செஸ் வரலாற்றில் இளைய உலக சாம்பியனான டி.குகேஷ் உள்ளிட்ட சதுரங்கத்தில் சில வரலாற்று சாதனைகளுடன் இந்திய விளையாட்டுக்கும் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

Sports Rewind 2024: டி20 உலகக் கோப்பை தட்டித் தூக்கியது முதல் குகேஷ் சாம்பியன் ஆனது வரை.. முக்கிய நிகழ்வுகள்
Sports Rewind 2024: டி20 உலகக் கோப்பை தட்டித் தூக்கியது முதல் குகேஷ் சாம்பியன் ஆனது வரை.. முக்கிய நிகழ்வுகள்

யூரோ கால்பந்து மற்றும் கோபா அமெரிக்கா கால்பந்து போன்ற முக்கிய பல விளையாட்டு நிகழ்வுகளைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் கிரிக்கெட்டில் T20 உலகக் கோப்பை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டிலும் நடைபெற்றது. டிசம்பர் மாத தொடக்கத்தில் செஸ் வரலாற்றில் இளைய உலக சாம்பியனான டி.குகேஷ் உள்ளிட்ட சதுரங்கத்தில் சில வரலாற்று சாதனைகளுடன் இந்திய விளையாட்டுக்கும் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

முக்கிய நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

சாம்பியன் இந்தியா

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கையில் ஏந்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா.

பாரீஸ் ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில், வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பாக 100 கிராம் அடை அதிகரித்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருள் ஆனதை மறக்க முடியாது. அதைத் தொடர்ந்து விளையாட்டை விட்டு விலகிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா தேர்தலில் ஜெயித்து எம்எல்ஏவாகவும் ஆனார்.

  • இந்திய ஹாக்கி ஆடவர் அணி, ஒலிம்பிக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
  •  மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் 20-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது.
  •  இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர், ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

செஸ் சக்கரவர்த்தியாக முடிசூடிய சென்னை இளைஞர்

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சென்னையைச் சேர்ந்த டி.குகேஷ் சாம்பியனாகி சாதனை படைத்தார்.

  • 17-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. ஐதராபாத் சன் ரைசர்ஸை இறுதிப்போட்டியில் வீழ்த்தியது.

டென்னிஸில் இந்தியரின் சாதனை

  •  ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸி., ஓபனில் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா), ஜோடி பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம், அதிக வயதில் இந்த சாதனையைப் படைத்த வீரர் என்ற ரெக்கார்டை உருவாக்கினார் ரோகன்.

முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் ஓய்வு

  • பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிவதற்கு முன்பே, ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்திய அதிரடி வீரர் ஷிகர் தவன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
  •  இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு அறிவித்தார். இதேபோல், ஸ்பெயின் டென்னிஸ் ஜாம்பவான் நடால், ஓய்வு பெற்றார். இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனிஸ் சேத்ரியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • ஐசிசியின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா பொறுப்பேற்றார்.
  •  ஒலிம்பிக் டென்னிஸில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தினார் செர்பியாவின் ஜோகோவிச்.
  •  டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் கோவை கிங்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் முதல்முறையாக சாம்பியன் ஆனது.

பி.வி.சிந்து திருமணம்

  • தொழிலதிபர் வெங்கட தத்தாவை திருமணம் செய்து கொண்டார் பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து.
  • இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹார்திக் பாண்டியா, தனது மனைவி நடாசாவை பிரிந்தார்.
  •  சென்னையில் தீவு திடலைச் சுற்றியுள்ள சாலையை ஓடுபாதையாக மாற்றி பார்முலா 4 கார்பந்தயம் நடத்தப்பட்டது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சென்னையில் நடந்தது. இந்தப் போட்டி முடிவில், தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலத்துடன் 2வது இடத்தைப் பிடித்து அசத்தியது.

ஐபிஎல் 2025 சீசனுக்கான ஏலத்தில் ரிஷப் பண்ட், ரூ.27 கோடிக்கு ஏலம் போனார். அவரை லக்னோ அணி வாங்கியது. அதிக தொகைக்கு ஏலம் போன வீரராகி புதிய சாதனையைப் படைத்தார் ரிஷப்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி இந்தோனேசியாவின் ஐரீன் சுகந்தரை வீழ்த்தி ஃபிடே மகளிர் உலக ரேபிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பி.கே.எல் சீசன் 11 இன் லீக் கட்டத்தில் முதலிடம் பிடித்த ஹரியானா ஸ்டீலர்ஸ், புனேவில் பாட்னா பைரேட்ஸை தோற்கடித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.