தமிழ் செய்திகள்  /  Sports  /  Southafrica T20 League: Faf Du Plessis And Chennai Super Kings Reunite But In A Different League

SouthAfrica T20 League: சிஎஸ்கே அணியில் மீண்டும் டூ ப்ளெசிஸ்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 12, 2022 12:05 PM IST

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர் டூ ப்ளெசிஸ். தற்போது தென்ஆப்பரிக்கா தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சொந்தமான அணியில் இணைந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூ ப்ளெசிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூ ப்ளெசிஸ் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஃபாஃப் டு பிளெசிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக் கொள்ளவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ரூ. 7 கோடிக்கு வாங்கியது மட்டுமல்லாமல், அவரை அணியை கேப்டனாகவும் ஆக்கியது.

நடந்த முடிந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியை குவாலியபர் 2 போட்டி வரை அழைத்து சென்றார் அணியின் புதிய கேப்டன் டூ ப்ளெசிஸ். இதற்கிடையே ஏலம் நடைபெற்று முடிந்தது முதல் தற்போது வரை டூ ப்ளெசிஸை மிஸ் செய்தது பற்றி சிஎஸ்கே ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.   

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. டூ ப்ளெசிஸ் தென்ஆப்பரிக்கா டி20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியான ஜோகான்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடவுள்ளாராம்.

2023ஆம் ஆண்டில் தொடங்க இருக்கும் இந்த லீக்கில் ஜோகான்னஸ்பெர்க் அணிக்காக விளையாட டூ ப்ளெசிஸ்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினர் அணுகியுள்ளனர். தென்ஆப்பரிக்கா டி20 லீக்கில் உள்ள ஆறு அணிகளும், தங்களது அணிக்கான வீரர்களை நேரடியாக சேர்த்துக்கொள்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டூ ப்ளெசிஸை சிஎஸ்கேவுக்கு சொந்தமான ஜோகான்னஸ்பெர்க் அணியில் விளையாட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

அனைத்து அணி உரிமையாளர்களும் லீக் வழிகாட்டுதல்களின் கீழ் ஐந்து வீரர்களின் பட்டியலை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வழிமுறைகளின்படி, தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவர், மூன்று வெளிநாட்டு வீரர், ஒரே நாட்டிலிருந்து இருவருக்கு மேல் தேர்வு செய்யக்கூடாது மற்றும் ஒரு அன்கேப்ட் கிரிக்கெட் வீரரை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மொயீன் அலியும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தால் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தொடரின் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்குச் சொந்தமான பிரிட்டோரியா மற்றும் போர்ட் எலிசபெத் அணிகளுக்கு முறையே தங்களது அணிகளில் உள்ள நட்சத்திரங்களான அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோரை தக்க வைத்துள்ளனர்.

பார்லை அணியை வாங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், ஜோஸ் பட்லரைத் தக்க வைத்துக் கொண்டது. டர்பன் அணியை வாங்கியிருக்கும் லக்நெள சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் விக்கெட் கீப்பர்-பேட்டர் குயிண்டன் டி காக்-ஐ தக்க வைத்துக் கொண்டது.

மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் என்று தங்கள் அணியின் பெயரை வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன், ககிசோ ரபாடா மற்றும் ரஷித் கான் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

WhatsApp channel