India Open: தரமான சம்பவம் செய்த பி.வி. சிந்து.. போராடி வென்ற கிரண்.. சாத்விக் - சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு தகுதி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Open: தரமான சம்பவம் செய்த பி.வி. சிந்து.. போராடி வென்ற கிரண்.. சாத்விக் - சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு தகுதி

India Open: தரமான சம்பவம் செய்த பி.வி. சிந்து.. போராடி வென்ற கிரண்.. சாத்விக் - சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு தகுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2025 05:55 PM IST

India Open Badminton: இந்தியா சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, கிரண் ஆகியோர் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். சாத்விக் - சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளனர்.

தரமான சம்பவம் செய்த பி.வி. சிந்து.. போராடி வென்ற கிரண்.. சாத்விக் - சிராக் ஜோடியும் அடுத்து சுற்றுக்கு தகுதி
தரமான சம்பவம் செய்த பி.வி. சிந்து.. போராடி வென்ற கிரண்.. சாத்விக் - சிராக் ஜோடியும் அடுத்து சுற்றுக்கு தகுதி (PTI)

இரட்டையர் பிரிவில் வெற்றி

கடந்த 2022இல் நடைபெற்ற இந்த தொடரில் பதக்கம் வென்ற இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றனர். ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுஹாஷி, கென்யா நாட்டை சேர்ந்த ஹிரோகி ஒகமுரா ஜோடிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய ஜோடி போராடி வெற்றி பெற்றது. 20-22 21-14 21-16 என மூன்று சுற்றுகள் சென்ற இந்த போட்டியில் முதல் மற்றும் மூன்றாவது சுற்றில் இந்தியா ஜோடி வென்றது

"அவர்கள் மாறி மாறி விளையாடுவதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நம்மிடம் இருக்கக்கூடாத எளிதான பிழைகளைக் கட்டுப்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். முதல் ஆட்டத்தில் நாங்கள் மிகவும் வசதியாக விளையாடினோம். எங்களால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி" என்று போட்டிக்கு பின்னர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார்.

சிந்து தரமான ஆட்டம்

ஜப்பான் வீராங்கனை உலகின் 46வது தரவரிசை வீராங்கனை மனாமி சூயிசு அணிக்கு எதிராக பி.வி. சிந்து விளையாடினார். தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-15 21-13 என நேர் செட்களில் வெற்றியை பெற்றார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீரரான அலெக்ஸ் லானியருக்கு எதிரான போட்டியில் 22-20 21-13 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வெற்றி பெற்றார்.

பி.வி. சிந்து தனது அடுத்த போட்டியில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரிகோரியா மாரிஸ்கா துன்ஜங்க்கு எதிராக விளையாட உள்ளார். கிரண் ஜார்ஜ் தனது அடுத்த போட்டியில் சீனாவை சேர்ந்த ஹோங் யாங் வெங் என்பவரை தனது அடுத்த போட்டியில் எதிர்கொள்கிறார்.

கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் தனிஷா க்ராஸ்டோ மற்றும் துருவ் கபிலா போட்டியில் எட்டாவது சீட் வீரர்களான ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோவுக்கு எதிராக 18-21 17-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினர்.

மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா, ருதுபர்ணா பாண்டா மற்றும் ஸ்வேதபர்ணா பாண்டா ஆகியோரும், கலப்பு இரட்டையர் ஜோடியான அஷித் சூர்யா மற்றும் அம்ருதா பிரமுதேஷ் ஆகியோரும் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தனர்.

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர்

1973 முதல் நடைபெற்று வரும் இந்த தொடர், 2008 முதல் பிடபிள்யூஎஃப் உலக டூர் சூப்பர் 750 தொடரின் ஒரு பகுதியாக இடம்பிடித்தது. இதன் முதல் மூன்று பதிப்புகள் கிராண்ட் பிரிக்ஸ் கோட் தொடராகவும், 2011 முதல் பிடபிள்யூஎஃப் சூப்பர் சீரிஸ் ஆகவும் அப்கிரேட் ஆனது. 2019க்கு பிறகு ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக மாறியது.

இந்த தொடரில் 1981இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரகாஷ் படுகோன், 2010இல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், கலவை இரட்டையர் பிரிவில் வலியவீட்டில் டிஜு மற்றும் ஜுவாலா கட்டா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 2015இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் (இரண்டாவது முறை), 2017இல் பி.வி. சிந்து, 2022இல் கலவை இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் பட்டம் வென்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.