தமிழ் செய்திகள்  /  Sports  /  Shubman Gill Becomes The Player Of The Series For His Sensational Performance With The Bat

Shubman Gill: 3 ODI-ல் ‘தொடர் நாயகனின்’ மொத்த ஸ்கோர் என்ன தெரியுமா?

Manigandan K T HT Tamil
Jan 25, 2023 07:22 AM IST

Ind vs NZ ODI: இளம் வீரரான சுப்மன் கில், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து கலக்கி வருகிறார்.

சுபமன் கில்.
சுபமன் கில். (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட சுப்மன் கில், அதிரடி ஜாலம் நிகழ்த்தினார்.

நேற்று இந்தூரில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் சுழன்றடித்த சூறாவளி போல், 78 பந்துகளில் 112 ரன்கள் அடித்து அசத்தினார் சுப்மன் கில். அதில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.

நியூசி.,-க்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சுப்மன் கில், 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலக்கு மிகவும் குறைவு என்பதால் அவரது ஸ்கோரும் குறைந்துவிட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் கில்.

ஐதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 208 ரன்கள் விளாசி முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் கில்.

ஒட்டுமொத்தமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் 360 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

முன்னதாக, குவாஹாட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 70 ரன்களை விளாசிய கில், மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் 116 ரன்களை விளாசினார். 2வது ஒரு நாள் ஆட்டத்தில் மட்டும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்தத் தொடரில் அவர் 207 ரன்களை விளாசினார்.

இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி 295 ரன்களில் ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து தரப்பில் டெவன் கான்வே 138 ரன்களை விளாசினார். எனினும், அவரது சதம் வீணானது. நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் 6 ஓவர்கள் வீசி 45 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்