September Sports Rewind: ஆசிய கோப்பை கிரிக்கெட் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை.. விளையாட்டு திருவிழா மாதம்
ஆசிய கோப்பை பைனலில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
செப். 1: சர்வதேச செஸ் சம்மேளனத்தின் உலகத் தரவரிசையில் இந்தியர்களில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழர் குகேஷ்
செப். 3: எஃப்1 கார் பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட்ப்ரீ ரேஸில் நெதர்லாந்து வீரரும், ரெட்புல் ஓட்டுநருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி முழுமையாக கைப்பற்றியது.
செப். 5: உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கில், கோலி, ஸ்ரேயஸ், ராகுல், இஷான், ஜடேஜா, அக்சர், குல்தீப், ஷர்துல், ஷமி, சிராஜ், பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
செப் 10: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அர்யனா சபலென்காவை 2-6,6-3,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கெளஃப்
செப் 11: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி யதன் மூலம் 24-வது முறையாக பட்டம் வென்றததோடு மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையும் சமன் செய்தார். இதன் மூலம் டென்னிஸ் உலகின் மன்னன் என்பதை நிரூபித்துளார் ஜோகோவிச்
செப். 14: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182 ரன்களை விளாசினார். இதன்மூலம், ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
செப் 17: ஆசிய கோப்பை பைனலில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
பிரேசிலில் நடைபெற்ற ரைஃபிள்-பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.
டயமண்ட் லீக் இறுதிப் போ்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
செப். 18: ஆசிய கோப்பையில் 8வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் ஆனது.
செப். 22: ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம் வெளியானது.
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
செப். 23: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23ம் தேதி தொடங்கியது.
செப். 24: இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி கண்டது. டி.எல்.எஸ் முறைப்படி இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் நாளிலேயே ஆசிய கேம்ஸில் இந்தியா 5 பதக்கங்களை வென்றது.
கரீபியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா வாரியர்ஸ் சாம்பியனானது.
செப். 25: ஆசிய கேம்ஸில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தியது.
செப். 26: ஆசிய கேம்ஸில் குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்று வரலாறு படைத்தது.
செப். 27: ஆசிய கேம்ஸில் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்தன.
செப். 28: ஆசிய கேம்ஸில் துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம் கிடைத்தது. குதிரையேற்றத்தில் வெண்கலம் கிடைத்தது.
அக்சர் படேலுக்கு பதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
செப். 29: இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கின.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.