Tamil News  /  Sports  /  Sculpture Of Fifa World Cup Trophy By Sudarsan Pattnaik Made On Sand
உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்
உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்

FIFA World Cup 2022: 8 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!

21 November 2022, 9:37 ISTDivya Sekar
21 November 2022, 9:37 IST

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 8 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது தொடர் நேற்று கோலாகமாக தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடரை கத்தார் நாடு நடத்துகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெறுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், கத்தாரில் நேற்று தொடங்கிய பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.

ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்
உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்

இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் உருவாக்கிய இந்த மணல் சிற்பத்தை அனைவரும் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

டாபிக்ஸ்