Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி
Thailand Open 2024: சீனா தைபே ஜோடியை வீழ்த்திய இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தாய்லாந்து ஓபன் தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் நான்காவது இறுதி போட்டிக்கு இந்த ஜோடி சென்றுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் இருக்கும் நிமிபுத்ர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்திய நட்சத்திர ஜோடி சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
சீனா தைபேவுக்கு எதிராக வெற்றி
இந்திய ஜோடி சீனா தைபேவை சேர்ந்த லு மிங்-சே மற்றும் டாங் கை-வேய் ஜோடியை முதல் முறையாக எதிர்கொண்டது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை வெற்றியை பெற்றது. இந்த போட்டி 35 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதைத்தொடர்ந்து மே 19ஆம் தேதி (நாளை) நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் சீனா ஜோடியான சென் போ யாங் மற்றும் லூ யி ஜோடியை எதிர்கொள்ள இருக்கிறது.
முன்னதாக காலிறுதி போட்டியில் மலேசிய ஜோடியான ஜூனைடி ஆரிப் மற்றும் ராய் கிங் யாப் ஆகியோரை 21-7, 21-14 என்ற நேர் செட்களில் சாத்விக் - சிராக் ஆகியோர் வீழ்த்தி, தற்போது அரையிறுதியிலும் நேர் செட்களின் வெற்றி பெற்றுள்ளனர்.
நான்காவது இறுதிப்போட்டி
கடந்த 2019இல் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி முதல் முறையாக சூப்பர் 500 வென்று வாகை சூடினார். இதைத்தொடர்ந்து தற்போது BWF Tourஇல் மலேசியா சூப்பர் 1000 தொடர், இந்தியா சூப்பர் 750 தொடரில் இரண்டாவது இடம், பிரஞ்சு சூப்பர் 750 தொடரில் வெற்றி என கலக்கியுள்ளனர். தற்போது நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்குகிறார்கள்.
முன்னதாக, ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தது, பின்னர் சாத்விக் காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஷிப்பை தவறவிட்டார்.
இந்த சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு முன் இவர்கள் விளையாட இருக்கும் இந்த இறுதிபோட்டி உற்சாகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அரையிறுதியில் மகளிர் இரட்டையர்
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான தனிஷா கார்ஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
காலிறுதி போட்டியில் தென் கொரியாவின் லீ யூ லிம் மற்றும் ஷென் சியுங் சான் ஜோடியை 21-15 21-23 21-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் ஜோடி வென்றது. சுமார் 1 மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் இந்திய மகளிர் ஜோடி போராடி வெற்றியை பதிவு செய்தது.
அரையிறுதியில் தாய்லாந்து ஜோடியான ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்த பிரஜோங்ஜாயை, இந்தியாவின் தனிஷா கார்ஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா எதிர்கொள்கிறார்கள்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் தோல்வி
இளம் இந்திய வீராங்கனை மீராபா லுவாங் மைஸ்னமின், தாய்லாந்து வீராங்கனை குன்லவுட் விடிட்சார்ன்க்கு எதிராக 12-21 5-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்