Malaysia Open: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அரையிறுதிக்கு தகுதி.. விட்டத்தை பிடிப்பார்களா சாத்விக் - சிராக் ஜோடி
Malaysia Open 2025: மலேசியா ஓபன் கடந்த தொடரில் சாத்விக் - சிராக் ஜோடி ரன்னர் அப் பட்டத்தனை வென்றனர். இந்த முறை இந்த ஸ்டார் ஜோடிகள் தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஸ்டார் ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சாத்விக் - சிராஜ் ஜோடி கலக்கல்
மலேசியா ஓபன் தொடர் மதிப்புமிக்க சூப்பர் 1000 தொடராக உள்ளது. இந்த தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஏழாவது சீட் இந்திய வீரர்காளான சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியா ஜோடி யூ சின் ஓங் மற்றும் ஈ யி தியோவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் 26-24, 21-15 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்த போட்டி 49 நிமிடம் வரை நீடித்தது.
மலேசியா ஓபன் தொடர் கடந்த பதிப்பில் இந்த ஜோடி இறுதிவரை தகுதி பெற்று, கோப்பையை கைவிட்டு ரன்னர் அப் ஆனது. இதையடுத்து தற்போது இவர்கள் மீண்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.