Sakshi Singh: மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுகிறேன்! கண்ணீருடன் தெரிவித்த ஒலிம்பிக் வெற்றியாளர் சாக்‌ஷி மாலிக்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sakshi Singh: மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுகிறேன்! கண்ணீருடன் தெரிவித்த ஒலிம்பிக் வெற்றியாளர் சாக்‌ஷி மாலிக்

Sakshi Singh: மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுகிறேன்! கண்ணீருடன் தெரிவித்த ஒலிம்பிக் வெற்றியாளர் சாக்‌ஷி மாலிக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 21, 2023 10:05 PM IST

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் நண்பர் புதிய தலைவர் தேர்வாகியிருக்கும் நிலையில் மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஒலிமபிக் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்‌ஷி மாலிக்.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது கண்ணீருடன் வெளியேறிய சாக்‌ஷி மாலிக்
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது கண்ணீருடன் வெளியேறிய சாக்‌ஷி மாலிக் (Hindustan Times)

இதையடுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் கதறி அழுததுடன், மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிந்த பின்னர் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "40 நாள்கள் வரை நாங்கள் சாலையில் படுத்துக்கிடந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். பிரிஜ் பூஷணின் பிஸ்னஸ் பார்ட்னரும், அவருக்கு நெருக்கமானவருமான சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மல்யுத்தத்திலிருந்து விலகிவிடுவேன்.

ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். பெண் தலைவராக இருந்தால் பாலியல் துன்புறுத்தல் வீராங்கனைகளுக்கு நடக்காது" என்றார்.

அப்போது சஞ்சய் சிங் வெற்றி பெற்றதாக முடிவு தெரியவந்தநிலையில், மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக கூறி கதறி அழுதவாறே வெளியேறினார் சாக்‌ஷி மாலிக்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியதாவது: "மல்யுத்த வீரர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுவர்கள். மல்யுத்த கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவாக நிற்கும். மல்யுத்த வீரர்களின் ஆட்டத்திறனை மட்டும் பார்ப்போம்" என்றார்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

மல்யுத்த வீரர்கள் போராட்ட சில வாரங்கள் வரை நீடித்த நிலையில், மே 28ஆம் தேதி டெல்லி போலீசாரால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மல்யுத்த வீரர்களின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரிஜ் பூஷன் சிங்குக்கு நெருக்கமானவர்கள் யாரும் மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் உறுதி அளித்ததையடுத்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை முழுமையாக ஜூன் 7ஆம் தேதி கைவிட்டனர்.

ஆனால் தற்போது பிரிஜ் பூஷன் சிங் நண்பர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் போட்டியட்டதையடுத்து மல்யுத்த வீரர் பஞ்ரங் புனியா, அரசு தனது வாக்குறுதியில் இருந்து பின் வாங்கியதாக தெரிவித்தார்.

பிரிஜ் பூஷன் சிங் நண்பரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வாகியிருக்கும் சஞ்சய் சிங் உத்தர பிரதேசம் மல்யுத்த கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்துள்ளார். கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினஸில் இருந்து வரும் இவரது அணி மொத்தமுள்ள 15 பதவிகளில் 13இல் வெற்றி பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.