Saudi Pro League: சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்- இத்திஹாத் சாம்பியன்!
Al Ittihad: சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றுடன் இப்போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 30 ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-இத்திஹாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது ஒட்டுமொத்தமாக இந்த அணியின் 9வது சாம்பியன் பட்டம் ஆகும்.
போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த கால்பந்து கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடினார்.
இந்த சீசனில் அவர் இடம்பிடித்திருந்த அல் நசர் அணி 2வது இடம் பிடித்தது. பெரிய அளவில் ரொனால்டோ கோல் எதுவும் பதிவு செய்யவில்லை.
மொத்தம் 30 ஆட்டங்கள் நடந்தன. இதில் 22 ஆட்டங்களில் வென்று அல்-இத்திஹாத் 72 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
இந்த அணி 2 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. 6 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது. 2023 சவுதி ப்ரோ லீக் போட்டியில் மொத்தம் 60 கோல்களைப் பதிவு செய்தது அல்-இத்திஹாத்.
இதேபோல், ரொனால்டோ இடம்பிடித்த அல்-நசர் அணி, மொத்தம் 30 ஆட்டங்களில் விளையாடிய 20 இல் ஜெயித்தது. 3 இல் மட்டுமே தோற்றது. 7 ஆட்டங்களில் டிரா செய்தது. மொத்தம் 63 கோல்களை பதிவு செய்துள்ளது.
67 புள்ளிகளைப் பெற்ற இரண்டாவது இடத்தில் உள்ளது.
அல்-ஹிலால் அணி 17 வெற்றிகளுடன் 59 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தது.
இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ஒப்பந்தம் முடிந்ததும் விடுவிக்கப்பட்ட ரொனால்டோ, 16 அணிகள் மோதும் சவுதி அரேபியன் லீக்கில் பங்கேற்றார்.
அவர் ஆசிய கால்பந்து கிளப் அணிக்காக விளையாட வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நேற்றைய கடைசி ஆட்டத்தில் அல்-ஃபடேவை 3-0 என்ற கோல் கணக்கில் அல்-நசர் வீழ்த்தியது.
ஆனால், அந்த ஆட்டத்தில் ரொனால்டோ விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் பெஞ்சில் அமர்ந்திருந்தார். மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் 14 கோல்களைப் பதிவு செய்தார்.
வெற்றி பெற்ற அணி இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி பரிசுத் தொகையை வென்றது. கோப்பையையும் கைப்பற்றியது.
அல்-இத்திஹாத் அணி ஒட்டுமொத்தமாக 9வது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்