Cristiano Ronaldo: முதல் மற்றும் ஒரே கால்பந்து வீரராக ரொனால்டோ நிகழ்த்திய சாதனை.. மெஸ்ஸி நெருங்குவது கூட கடினமாமே
Cristiano Ronaldo: கால்பந்து விளையாட்டி முதல் வீரராகவும், ஒரே வீரராகவும் தனித்துவ வரலாற்று சாதனை புரிந்துள்ளார் ஸ்டார் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. மெஸ்ஸியால் கூட இந்த சாதனையை நெருக்குவது கடினம் என கூறப்படுகிறது.

போர்ச்சுகல் நாட்டின் பார்வேர்டு வீரரும், உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் ஸ்டார் வீரருமான கிறிஸ்டியானோ ரெனால்டோ கால்பந்து உலகின் சிறந்த வீரராக உள்ளார். இவருக்கு கொஞ்சமும் சளைக்காத விதத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து, கோடானு கோடி ரசிகர்களை கொண்ட மற்றொரு நட்சத்திர வீரராக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இருக்கிறார்.
கால்பந்து விளையாட்டில் நிகழ்காலத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சாதனைகளில் டாப் இரண்டு இடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகியோர் டாப் இரண்டு இடங்களில் இருந்து வருகிறார்கள். இந்த தலைமுறையின் காணும் சிறந்த கால்பந்து வீரர்களாக இருக்கும் இவர்கள் மாறி மாறி வரலாற்று சாதனை நிகழ்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ தனித்துவமான வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கண்டிப்பாக இந்த சாதனையை மெஸ்ஸியால் நிகழ்த்தவது என்பது கடினமான விஷயமே என்ற கருத்துகளும் பகிரப்படுகிறது
யாரும் நிகழ்த்திடாத அரிய சாதனை
சவுதி புரொ லீக் கால்பந்து தொடரில் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதையடுத்து அல்-ராயித் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் அல்-நசர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கால்பந்து கிளப் போட்டிகளில் 700வது வெற்றியை பதிவு செய்தார் ரொனால்டோ. கால்பந்து விளையாட்டில் வேறு எந்த வீரரும் நிகழ்த்திடாத வரலாற்று சாதனையாக இது அமைந்துள்ளது.
இதில் போர்ச்சுகல் கிளப் அணியான ஸ்போர்டிங் அணிக்கு 13, ரியல் மாட்ரிட் அணிக்கு 316, மான்சஸ்டர் அணிக்கு 214, ஜுவென்டஸ் அணிக்கு 91, அல்-நசர் அணிக்கு 66 வெற்றிகள் அடங்கும். அனைத்து வகை கால்பந்து போட்டிகளிலும் சேர்த்து ரொனால்டோ இதுவரை 900க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த வீரர் என்கிற சாதனையும் தன் வசம் வைத்துள்ளார்.
சவுதி கிளப் போட்டிகளில் 94 ஆட்டங்கள் விளையாடியிருக்கும் ரொனால்டோ 85 கோல்கள் அடித்துள்ளார் முன்னிலையில் உள்ளார்.
ரொனால்டோ 2026 FIFA உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
முன்னதாக, ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியின் சக வீரர் புருனோ பெர்னாண்டஸ், ரொனால்டோ 2026 உலகக் கோப்பையில் விளையாடக்கூடும் என்று சூசகமாகக் கூறியிருந்தார்.
"ரொனால்டோ உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இருப்பார் என உறுதியாக நம்புகிறேன். கிறிஸ்டியானோ ரொனால்டோ தேசிய அணியுடன் உலகக் கோப்பையை வெல்லும் தனது கனவை நிறைவேற்றினால் அது மிகவும் அவருக்கு மட்டுமல்ல, போர்ச்சுகீசிய மக்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்" என்று மான்செஸ்டர் யுனைடெட் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ் டிஎன்டி ஸ்போர்ட்ஸிடம் ஊடகத்தில் பேட்டியளித்தபோது கூறினார்.
கால்பந்து விளையாட்டில் எண்ணற்ற சாதனைகள் புரிந்திருந்தாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிடாத பெரிய கோப்பையாக உலகக் கோப்பை இருந்து வருகிறது. 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின்போது ரொனால்டோ 41 வயதை எட்டியிருப்பார். எனவே தேசிய அணிக்காக அவர் விளையாடுவாரா என்பது மிக பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் ரெனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக 217 போட்டிகள் விளையாடி 135 கோல்களை அடித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்