தமிழ் செய்திகள்  /  Sports  /  Rohit Sharma Explains About Lose Aganist Gujarat Titans In Ipl 2023, Qualifier 2

GT vs MI: 'எங்கள் தோல்விக்கு இது தான் காரணம்'.. மும்பை கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!

Karthikeyan S HT Tamil
May 27, 2023 11:35 AM IST

Rohit Sharma: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 குவாலிபையர் 2-வது போட்டியில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது.

ரோஹித் சர்மா,  ஷுப்மன் கில்
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில்

ட்ரெண்டிங் செய்திகள்

இறுதியில் ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களிலும், வதேரா 4 ரன்களிலும் வெளியேறினார்.

கேமிரான் கிரீன் 30, திலக் வர்மா 43 மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக, தனி ஆளாக கெத்து காட்டிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 61 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இருப்பினும் மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியது. குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, "ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அடித்து ஆடுவதற்கு ஏற்ற ஆடுகளம். குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர். கிரீன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்கள். பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மொமண்டம் கிடைக்கவில்லை. 

ஷுப்மன் கில் மாதிரி யாராவது ஒரு பேட்டர் கடைசிவரை விளையாடி இருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் இது விளையாடுவதற்கு நல்ல மைதானம். இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து விசிய பவுலர்கள் இந்தப் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. இன்று விளையாடியதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. குஜராத் அணி நன்றாக விளையாடியது. ஷுப்மன் கில் இனிவரும் போட்டிகளிலும், அவரது இந்த ஃபார்ம் தொடரும் என நம்புகிறேன்." என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்