தமிழ் செய்திகள்  /  Sports  /  Ravindra Jadeja, Yash Dayal Ruled Out Of Bangladesh Odi Series

Ravindra jadeja injury: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஜடேஜா விலகல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 24, 2022 12:03 PM IST

காயம் முழுமையாக குணமடையாத நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலிருந்து ஜடேஜா விடுவிக்கப்பட்டார். அவருடன் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளும் விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகிய ரவீந்திர ஜடேஜா
காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகிய ரவீந்திர ஜடேஜா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தொடருக்கு பின் டிசம்பரில் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு நாள் அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடாத ஜடேஜா, காயம் தேறி வந்த நிலையில் வங்கேதசத்துக்கு எதிரான தொடருக்குள் தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜடேஜாவுக்கு காயம் இன்னும் முழுமையாக குணமாகத நிலையில், அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் அவருக்கு மேலும் இரு வாரங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுடன் காயமடைந்துள்ள மற்றொரு வீரரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளும் நீக்கப்பட்டார்.

இவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென், ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒரு தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எஸ். பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்

WhatsApp channel