தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Arjun Tendulkar 100: ‘நான் தானே பண்ணனும்’ சச்சின் சாதனையை சமன் செய்த அவரது மகன்!

Arjun Tendulkar 100: ‘நான் தானே பண்ணனும்’ சச்சின் சாதனையை சமன் செய்த அவரது மகன்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 15, 2022 09:04 AM IST

Ranji Trophy debut Arjun Tendulkar century: 1988 ஆம் ஆண்டு குஜராத்திற்கு எதிராக ரஞ்சி கோப்பையில் அறிமுகமான சச்சின், தனது அறிமுகத்திலேயே சதம் அடித்து அசத்தினார். தற்போது அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார் அர்ஜூன்.

சச்சின் உடன் அர்ஜூன் டெண்டுல்கர்
சச்சின் உடன் அர்ஜூன் டெண்டுல்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

மாஸ்டர் பிளாஸ்டராக விளங்கிய சச்சின், அவரது வீட்டில் இருந்து குட்டி மாஸ்டர் பிளாஸ்டரை உருவாக்குவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர், சச்சின் மாதிரியான ஒரு சிறந்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர்  -கோப்பு படம்
அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் -கோப்பு படம்

ஆனால், அவர் பேட்டிங் என்று இல்லாமல், பவுலிங் என்று இல்லாமல், ஆல்ரவுண்டராக தன்னை செதுக்கி வந்தார். சச்சின் ஒரு வலது கை ஆட்டக்காரர். அர்ஜூன் இடது கை ஆட்டக்காரர். இப்படி எல்லா விசயத்திலும் சச்சினுக்கு நேர் எதிரான குணாதிசயங்களை கொண்டவராக அர்ஷூன் இருந்தார்.

என்ன தான் தன்னுடைய மகனாக இருந்தாலும், சிபாரிசு இல்லாமல் திறமையில் அவர் வளர்வதையே சச்சின் விரும்பினார். ஆனால், அர்ஜூனுக்கு அதற்கு நிறைய காலம் எடுத்தது. பல்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அவர், வாய்ப்புகள் இன்றி அணியின் 11 வீரர்களை கடந்த வீரராகவே இருந்து வந்தார்.

தந்தை சச்சின் உடன் அர்ஜூன்
தந்தை சச்சின் உடன் அர்ஜூன்

இந்நிலையில் தான்ரஞ்சிக் கோப்பையில் கோவா அணிக்காக தனது முதல் ஆட்டத்தை ஆல்ரவுண்டராக தொடங்கினார் அர்ஜூன் டெண்டுல்கர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்த அர்ஜூன், அணியை சரிவிலிருந்து மீட்டார். ராஜஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் அடித்ததன் மூலம் தனது ரஞ்சி கோப்பை அறிமுகத்தை மறக்கமுடியாததாக ஆக்கினார்.

கோவாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அர்ஜுன் 178 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். அத்தோடு, அர்ஜுன் தனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் சமன் செய்தார். ஜூனியர் டெண்டுல்கர், தனது தந்தையைப் போலவே, தனது முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

கடற்கரையில் மகன் அர்ஜூன் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சச்சின்
கடற்கரையில் மகன் அர்ஜூன் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சச்சின்

1988 ஆம் ஆண்டு குஜராத்திற்கு எதிராக ரஞ்சி கோப்பையில் அறிமுகமான சச்சின், தனது அறிமுகத்திலேயே சதம் அடித்து அசத்தினார். 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அர்ஜுன் 178 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவரது இன்னிங்ஸ் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களைக் கொண்டது.

சச்சினின் மகன், அவரது சாதனையை சமன் செய்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டாலும், ஏன் ஆச்சரியம், நான் சச்சின் மகனாச்சே என்று தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.

WhatsApp channel

டாபிக்ஸ்