Rajinikanth: வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியை ரசிக்கும் ரஜினி
Rajinikanth in Wan:இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராௌஃப் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதையடுத்து படப்பிடிப்புக்கு இடையே ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியை தற்போது நேரில் கண்டுகளித்து வருகிறார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருக்கிறார்.
முன்னதாக, மைதானத்துக்கு வந்திருந்த ரஜினிகாந்தை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் காலே வரவேற்றார். பின்னர் இருவரும் விஐபிக்கள் அமரும் கேலரியில் அமர்ந்தவாறு ஆட்டத்தை ரசித்தனர்.
முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த இந்திய அணி பெளலர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அற்புதமான பெளலிங்கால் திணறடித்தனர். இதனால் 188 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து 189 ரன்களை சேஸ் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது.
ரஜினி இந்தப் போட்டியை காணும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் பின்னர் ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.
சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் ரஜினிகாந்த், தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறார்.
டாபிக்ஸ்