தமிழ் செய்திகள்  /  Sports  /  Qatar Performance Is Worst Ever By A World Cup Host Nation

FIFA 2022: வெளியேறியது கத்தார், அடுத்த சுற்றுக்கு நெதர்லாந்து முன்னேற்றம்

I Jayachandran HT Tamil
Nov 30, 2022 06:13 AM IST

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலிருந்து கத்தார் வெளியேற்றப்பட்டது.

நெதர்லாந்திடம் வீழ்ந்தது கத்தார்
நெதர்லாந்திடம் வீழ்ந்தது கத்தார்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த உலகக்கோப்பை போட்டியை நடத்துவதற்காக ஏறத்தாழ 200 கோடி டாலர்களை கத்தார் செலவிட்டுள்ளது. ஆசியக் கோப்பை 2019 சாம்பியனான கத்தார் இந்தப் போட்டியில் தொடக்க சுற்றிலேயே வெளியேறியது பரிதாபமான நிலையாகும்.

நெதர்லாந்து அணியுடனான போட்டியில் 0-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் கத்தார் படுதோல்வியை அடைந்தது.

உலகக் கோப்பை போட்டிக்காக வேறு எந்த போட்டியிலும் கத்தார் அணி கலந்து கொள்ளாமல் பல மாதங்களாகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. வேறு போட்டிகளில் பங்கேற்காமல் தனியாக பயிற்சியில் ஈடுபடவேண்டும் என அணியின் பயிற்சியாளர் பெலிக்ஸ் சான்செஸ் எடுத்த முடிவு அவர் மீது கத்தார் அணியின் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் செனகலுடனான ஆட்டத்தில் 1-3 என்ற கோல்கணக்கில் தோற்றது. உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஈகுவேடார் அணியுடன் கத்தார் மோதியது. அதில் 0-2 என்ற கணக்கில் தோற்றது.

நெதர்லாந்திடம் வீழ்ந்ததால் இந்தப் போட்டிகளில் இருந்து வெளியேறும் முதல் அணியாக கத்தார் மாறியுள்ளது. மொத்தப் போட்டிககளிலும் ஒரேயொரு கோலை மட்டுமே கத்தார் எடுத்துள்ளது.

உலகக் கோப்பையை நடத்திய நாடுகளில் குரூப் சுற்றில் இருந்து வெளியேறிய பெயரைப் பெற்ற இரண்டாவது நாடு கத்தார் ஆகும்.

முன்னதாக கடந்த 2010 ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென்னாப்பிரிக்கா இவ்வாறு வெளியேறியது. இருப்பினும் மெக்ஸிகோவிடம் டிரா செய்தும் பிரான்ஸ் அணியை வென்றும் 4 புள்ளிகளை தென்னாப்பிரிக்கா பெற்றது ஆறுதலான விஷயமாகும். ஆயினும் 16 அணி ரவுண்டுக்கு தென்னாப்பிரிக்கா தேர்வாக முடியவில்லை.

1930 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலிருந்து பார்க்கையில் இதுவரை நடைபெற்ற 22 உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்திய பிற நாடுகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

2002ஆம் ஆண்டு ஜப்பான் கடைசி 16 அணிகள் ரவுண்டில் வெளியேறியது. அதேபோல் 1994ஆம் ஆண்டில் அமெரிக்காவும் கடைசி 16 ரவுண்டில் வெளியேறியது.

போட்டியை நடத்திய நாடுகள் இதுவரை 6 முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டில் பிரான்ஸ் வென்றது. இரண்டு முறை ரன்னர்-அப் ஆனது.

உலகக் கோப்பையை நடத்திய அணிகளின் முந்தைய சாதனைகள் விவரம்:

2018: ரஷ்யா காலிறுதி ஆட்டம்

2014: நான்காவது இடத்தை பெற்றது பிரேசில்

2010: குரூப் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்கா வெளியேறியது

2006: மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது ஜெர்மனி

2002: நான்காவது இடத்தைக் கைப்பற்றியது தென்கொரியா; கடைசி 16 ரவுண்டில் காலியானது ஜப்பான்

1998: பிரான்ஸ் வெற்றி

1994: கடைசி 16 ரவுண்டில் அமெரிக்கா தோல்வி

1990: மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது இத்தாலி

1986: காலிறுதியில் மெக்ஸிகோ தோல்வி

1982: இரண்டாவது குரூப் ஆட்டத்தில் ஸ்பெயின் வெளியேற்றம்

1978: அர்ஜெண்டினா வெற்றி

1974: மேற்கு ஜெர்மனி வெற்றி

1970: காலிறுதியில் மெக்ஸிகோ தோல்வி

1966: இங்கிலாந்து வெற்றி

1962: மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது சிலி

1958: ஸ்வீடன் ரன்னர் அப்

1954: காலிறுதியில் ஸ்விட்சர்லாந்து தோல்வி

1950: பிரேசில் ரன்னர் அப்

1938: காலிறுதியில் பிரான்ஸ் தோல்வி

1934: இத்தாலி வெற்றி

1930: உருகுவே வெற்றி

WhatsApp channel