உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க சிறப்பாக நடந்த பி.வி.சிந்து திருமணம்! -போட்டோஸ் இதோ
பி.வி.சிந்து வெங்கட தத்தாவை உதய்பூரில் ஒரு அமைதியான விழாவில் மணந்தார், தங்க சேலை மற்றும் மலர் அலங்காரங்களை அணிந்தார்.

நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க சிறப்பாக நடந்த பி.வி.சிந்து- வெங்கட் தத்தா திருமணம்
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருமணம் செய்து கொண்டார். வெங்கட தத்தாவை உதய்பூரில் மணந்தார். திருமணமான தம்பதிகளாக அவர்களின் முதல் படத்தை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று மாலை உதய்பூரில் நடைபெற்ற எங்கள் பேட்மிண்டன் சாம்பியன் ஒலிம்பியன் பி.வி.சிந்து மற்றும் வெங்கட்ட தத்தா சாய் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.