Malaysia Masters: இந்த ஆண்டின் முதல் பைனல்! மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பையை நெருங்கிய பிவி சிந்து
ஐந்தாவது சீட் வீராங்கனையான பிவி சிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பட்டமும் வெல்லவில்லை. மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் இந்த ஆண்டில் முதல் பைனல் போட்டியில் விளையாட இருக்கும் அவர் கோப்பையை நெருங்கியிருக்கிறார்.

மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பையை நெருங்கிய பிவி சிந்து
பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து. தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடி வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
தாய்லாந்து வீராங்கனையான பூசனன் ஓங்பாம்ருங்பன் என்பவரை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பரபரப்பான போட்டி
பூசனன் ஓங்பாம்ருங்பன் உடனான போட்டி மூன்று செட்களை விளையாடி அவரை வீழ்த்தியுள்ளார் பிவி சிந்து. முதல் செட்டில் 13-21 என பின் தங்கிய பிவி சிந்து, அடுத்து விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-16, 21-12 என அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றினார்.
