தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ufc 2024: அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்! கலப்பு தற்காப்பு கலை ஆட்டத்தை வென்ற முதல் இந்தியராக பெருமை பெற்ற பூஜா தோமர்

UFC 2024: அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்! கலப்பு தற்காப்பு கலை ஆட்டத்தை வென்ற முதல் இந்தியராக பெருமை பெற்ற பூஜா தோமர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2024 05:54 PM IST

கலப்பு தற்காப்பு கலை ஆட்டமாக இருக்கும் அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார் பூஜா தோமர்.

அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் கலப்பு தற்காப்பு கலை ஆட்டத்தை வென்ற முதல் இந்தியராக பெருமை பெற்ற பூஜா தோமர்
அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் கலப்பு தற்காப்பு கலை ஆட்டத்தை வென்ற முதல் இந்தியராக பெருமை பெற்ற பூஜா தோமர்

ட்ரெண்டிங் செய்திகள்

பிரேசில் வீராங்கனைக்கு எதிராக வெற்றி

பெண்களுக்கான ஸ்ட்ராவெயிட் பிரிவில் இந்தியாவின் பூஜா தோமர், பிரேசில் நாட்டு வீராங்கனையான ரேயான் டோஸ் சாண்டோஸை 30-27, 27-30, 29-28 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆனார்.

இதுகுறித்து பூஜா கூறியதாவது, "இந்தியர்கள் போராட்டை வெளிப்படுத்துபவர்கள், தோற்பவர்கள் அல்ல என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறேன். இந்தியர்களாக நாங்கள் எல்லா வழிகளிலும் முன்றனேறி செல்கிறோம். இதை நிறுத்தப் போவதில்லை. விரைவில் UFC சாம்பியனாவோம்!

இந்த வெற்றி எனது வெற்றி அல்ல. அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மற்றும் அனைத்து இந்திய போட்டயாளர்களுக்குமானது. நான் இந்திய கொடியுடன் இந்திய பாடலை பாடிக்கொண்டு வெளியே சென்றபோது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். அப்போது எனக்கு புல்லறித்தது" என்றார்

முன்னதாக, " போட்டி தொடங்கியபோது களத்தின் உள்ளே (அக்டோகன்), எந்த அழுத்தமும் இல்லை, 'நான் வெல்ல வேண்டும்' என்று நினைத்தேன். இரண்டு அல்லது மூன்று பஞ்ச்களை வாங்கினேன். ஆனாலும் விட்டுக்கொடுக்கவில்லை. எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த விரும்புகிறேன். எல்லா வழிகளிலும் சிறப்பாக செல்ல வேண்டும் என நினைக்கிறேன்" என்று கூறினார்.

மூன்று ரவுண்ட்கள் சென்ற போட்டி

பிரேசில் வீராங்கனை ரேயான் டோஸ்க்கு எதிரான போட்டி மூன்று ரவுண்டு வரை சென்றது. 15 நிமிடங்கள் கடினமான, வேகமான, இருவருக்கும் இடையே முன்னும் பின்னுமான போட்டியாக இருந்தது. சாண்டோஸ் தனது உயரம் மற்றும் வரம்பைப் பயன்படுத்தினார். ஆனால் தோமர் இறுதி மணி அடிப்பதற்கு காரணமாக இருந்த கிக்கை வெளிப்படுத்தி எதிராளிக்கு சேதத்தை ஏற்படுத்தினார்.

முதல் வீராங்கனை வென்று சாதனை

கடந்த 2023இல் UFC ஒப்பந்தத்தில் கையெப்பம் இட்ட முதல் இந்திய வீராங்கனையானார் பூஜா தோமர். இதைத்தொடர்ந்து தற்போது வெற்றி வாகை சூடி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

பூஜா, கடந்த நவம்பர் 2022இல் MFN ஸ்ட்ராவெயிட் பட்டத்தை வென்றார். MFN 10 இல் தனது முன்னாள் ONE எதிரியான பி குயன்-ஐ தோற்கடித்தார். ஜூலை தொடக்கத்தில் தனது முந்தைய சண்டையில், ரஷ்யாவின் அனஸ்தேசியா ஃபியோபனோவாக்கு எதிராக வென்று தனது பட்டத்தை தக்கவைத்தார்.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள புதானா கிராமத்தில் பிறந்த புஜா, ஐந்து தேசிய பட்டங்களை வென்ற வுஷூவுடன் தனது UFC விளையாட்டு பயணத்தை தொடங்கினார். பின்னர் 2012இல் சூப்பர் ஃபைட் லீக் மூலம் MMAக்கு மாறினார். அவர் 2021 இல் MFN இல் சேர்ந்தார் மற்றும் தொடர்ந்து நான்கு வெற்றிகளைப் பெற்றார்.

UFC தொடர்

அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) என்பது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை அடிப்படையாக கொண்ட அமெரிக்க கலப்பு தற்காப்புக் கலை (MMA) ஊக்குவிப்பு நிறுவனமாகும். 1990 களில் இருந்து இந்த விளையாட்டு தொடரானது நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாகியுள்ளார் பூஜா தோமர்.

அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) என்பது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை அடிப்படையாக கொண்ட அமெரிக்க கலப்பு தற்காப்புக் கலைகள் (MMA) ஊக்குவிப்பு நிறுவனமாகும். 1990 களில் இருந்து இந்த விளையாட்டு தொடரானது நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாகியுள்ளார் பூஜா தோமர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்