தமிழ் செய்திகள்  /  Sports  /  Praggnanandhaa Tops Viswanathan Anand To Become Number One For The First Time, Defeats World Champion Ding Liren

Chess: விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!உலக சாம்பயினை வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2024 12:32 PM IST

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்து வரும் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா.

இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா
இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் கருப்பு காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. தனது 62வது நகர்த்திலின் அவர் டிங் லிரினை வீழ்த்தி, நடப்பு உலக சாம்பியனை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த தொடரில் முதல் மூன்று சுற்றுகளில் விளையாடிய பிரக்ஞானந்தா டிராவில் முடித்தார். நான்காவது சுற்று கிளாச்சிக்கல் செஸ் போட்டியாக நடைபெற்றன. இதில் பிரக்ஞனந்தா உலக சாம்பியனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் கிளாசிக்கல் செஸ் போட்டியில் போட்டியில் உலக் சாம்பியனை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் எனவும் சாதனை புரிந்துள்ளார். முன்னதாக விஸ்வநாதன் ஆனந்த் தான் கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தியிருந்தார்.

பிரக்ஞானந்தா பெற்றிருக்கும் வெற்றியின் மூலம் இந்தியாவில் நம்பர் 1 வீரராக இருந்து வந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார். உலக சாம்பியனை வீழ்த்திய 18 வயதாகும் பிர்க்ஞானந்தா சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறி 2748.3 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இந்த புள்ளிகளில் இந்தியாவின் டாப் வீரராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த விஸ்வநாதன் ஆனந்த தற்போது 2748 புள்ளிகளை வைத்துள்ளார். இவர்தான் இந்திய வீரர்களில் 2000, 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

அதிக முறை உலக சாம்பியன்ஷிப் வென்றவர் என்ற முறையில் இந்தியாவின் டாப் வீரராக விஸ்வநாதன் ஆனந்த் இருந்து வந்துள்ளார். தற்போது அவரை வீழ்த்தி மற்றொரு தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்