PKL Season 10 Final: 'கப்பு முக்கியம் பிகிலு'-முதல் சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் இரு அணிகள்! இன்று PKL ஃபைனல்
புனேரி பல்தானும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் இதுவரை பிகேஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இன்று ஜெயிக்க அணி முதல் முறையாக சாம்பியனாகும்.

ப்ரோ கபடி லீக் பைனல் (@ProKabaddi)
ப்ரோ கபடி லீக் போட்டியின் பைனல் இன்று நடைபெறவுள்ளது. ஐதராபாத் நகரில் ஜிஎம்சி பாலயோகி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ப்ரோ கபடி லீக்கின் சீசன் 10 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. அதைத் தொடர்ந்து மொத்தம் 132 லீக் ஆட்டங்கள் நடந்தன. கடைசி லீக்கில் ஹரியானாவும் பெங்களூரு புல்ஸும் மோதின.
லீக் முடிவில் பாயிண்ட் டேபிளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.