PKL 2024: பெங்கால் வாரியர்ஸை பந்தாடிய தமிழ் தலைவாஸ் - மற்றொரு போட்டியில் டெல்லியிடம் வீழ்ந்த பெங்களுரு புல்ஸ்
கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மோதலில், தமிழ் தலைவாஸ் அந்த அணியை பந்தாடியுள்ளது
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவிலுள்ள தௌ தேவி லால் ஹுடா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 126வது போட்டி தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதியில், இரண்டாம் பாதி ரெயிட், டேக்கிள் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது தமிழ் தலைவாஸ். இரண்டு தொடர் தோல்வியால் பிளேஆஃப் வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் சம்பிரதாய ஆட்டமாக எந்த நெருக்கடியும் இல்லாமல் களமிறங்கியது.
அதேவேலையில் லீக் சுற்றில் கட்டாயமாக தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியது. இதையடுத்து அந்த அணிக்கு எதிரான இரண்டாவது மோதலில் சரியான பதிலடி கொடுத்துள்ளது தமிழ் தலைவாஸ்.
தொடக்கத்தில் இருந்தே மிகப் பெரிய அளவில் புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னேறிய தமிழ் தலைவாஸ், முழு ஆட்ட நேர முடிவில் 74-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. முதல் பாதியில் 31, இரண்டாம் பாதியில் 43 புள்ளிகளை பெற்றது தமிழ் தலைவாஸ்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியது தமிழ் தலைவாஸ்
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 43 ரெயிட், 18 டேக்கிள், 12 ஆல்அவுட், 1 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியையும் பெற்றது. பெங்கால் வாரியர்ஸ் அணி 26 ரெயிட், 6 டேக்கிள், 2 ஆல்ஆவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.
தமிழ் தலைவாஸ் வீரர் விஷால் சாஹல் 17 ரெயிட், 1 டேக்கிள், 1 போனஸ் என 19 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். பெங்கால் வாரியர்ஸ் வீரர் ரோகித் 4 ரெயிட், 5 போனஸ் என 9 புள்ளிகளை பெற்றார்.
இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு மோதல்களில் முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
தபாங் டெல்லி - பெங்களுரு புல்ஸ்
ப்ரோ கபடி லீக் தொடர் 127வது போட்டி தபாங் டெல்லி, பெங்களுரு புல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி ஏற்கனவே ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்ற அணியாக உள்ளது.
இதையடுத்து பெங்களுரு புல்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின் முதல் பாதியில் தபாங் டெல்லி முன்னிலை பெற்றது. ரெயிட் ஆட்டத்தில் இரு அணிகளும் சமநிலை பெற்ற நிலையில், டேக்கிள் ஆட்டத்தில் டெல்லி முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் பெங்களுரு புல்ஸ் முன்னிலை பெற்றது. ரெயிட், டேக்கிள் ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரே புள்ளிகள் பெற்றபோதிலும், 4 ஆல்அவுட் புள்ளி கூடுதலாக பெற்றது பெங்களுரு. முழு ஆட்ட நேர முடிவில் 46-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களுரு அணியை தபாங் டெல்லி வீழ்த்தியது
தபாங் டெல்லி அணி 23 ரெயிட், 18 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அத்துடன் 3 சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெற்றது
பெங்களுரு புல்ஸ் அணி 23 ரெயிட், 9 டேக்கிள், 4 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியும் பெற்றது.
தபாங் டெல்லி வீரர் ஆஷு மாலிக் 14 ரெயிட், 3 போனஸ் என 17 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். பெங்களுரு புல்ஸ் வீரர் சுஷில் 8 ரெயிட், 3 போனஸ் என 11 புள்ளிகளை பெற்றார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் தபாங் டெல்லி அணியே வெற்றி பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்