PKL Season 10 Final: சீசன் முழுக்க கெத்து ஆட்டம்!முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற புனேரி பல்தான்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl Season 10 Final: சீசன் முழுக்க கெத்து ஆட்டம்!முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற புனேரி பல்தான்

PKL Season 10 Final: சீசன் முழுக்க கெத்து ஆட்டம்!முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற புனேரி பல்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 01, 2024 09:17 PM IST

ப்ரோ கபடி லீக் 2024 சீசன் முழுக்கவே கெத்தாக விளையாடி வந்த புனேரி பல்தான், வெறும் 2 தோல்விகளை மட்டுமே சந்தித்தது. கடந்த சீசனில் பைனலுக்கு தகுதி பெற்ற புனேரி பல்தான், இந்த முறை மீண்டும் தகுதி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.

முதல் முறையாக ப்ரோ கபடி லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற புனேரி பல்தான் அணி
முதல் முறையாக ப்ரோ கபடி லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற புனேரி பல்தான் அணி

இந்த போட்டியில் முதல் இரண்டு பாதியிலும், ஹரியானாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்றது புனேரி பல்தான். முழு ஆட்டநேர முடிவில் 28-25 என்ற புள்ளிகளை பெற்று ஹரியானா அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது புனேரி பல்தான்.

கடந்த சீசனில் முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்று ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது புனேரி பல்தான். இதைத்தொடர்ந்து இந்த முறையும் பைனலில் நுழைந்த புனேரி கோப்பையை முதல் முறையாக வென்று சாதித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.