தமிழ் செய்திகள்  /  Sports  /  Pkl 2024: Jaipur Pink Panthers Beat Up Yoddhas By 37 Points, Bengal Warriors Wins Against U Mumba

PKL 2024: 37 புள்ளிகளில் அபார வெற்றி! யுபி யோதாஸை பந்தாடிய ஜெய்ப்பூர் - பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கும் பெங்கால் வாரியர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 13, 2024 04:00 AM IST

யுபி யோதாஸ் அணியை அடித்து துவைத்திருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 37 புள்ளிகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் யு மும்பா அணியை பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியுள்ளது.

யுபி யோதாஸ் அணி வீரரை மடக்கி பிடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்கள் (இடது), யு மும்பா வீரரை தப்பிக்க விடாமல் தடுக்கும் பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள்
யுபி யோதாஸ் அணி வீரரை மடக்கி பிடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்கள் (இடது), யு மும்பா வீரரை தப்பிக்க விடாமல் தடுக்கும் பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இரண்டு பாதிகளிலும் ரெயிட், டேக்கிள் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஜெய்ப்பூர் வீரர்களின் மிரட்டலான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் யுபி யோதாஸ் வீரர்கள் தடுமாறினர். முழு ஆட்ட நேர முடிவில் 67-30 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

ப்ளே ஆஃப் தகுதி பெற்ற போதிலும், பார்மை இழக்காமல் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து 37 புள்ளிகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 34 ரெயிட், 17 டேக்கிள், 10 ஆல்அவுட், 6 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெற்றது. யுபி யோதாஸ் அணி 18 ரெயிட், 10 டேக்கிள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட், சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர் அர்ஜுன் தேஷ்வால் 18 ரெயிட், 2 போனஸ் என 20 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். யுபி யோதாஸ் வீரர் ககன் கவுடா 10 ரெயிட் புள்ளிகளை மட்டும் பெற்றார்.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு மோதல்களிலும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.

பெங்கால் வாரியர்ஸ் vs யு மும்பா

ப்ரோ கபடி லீக் தொடர் 118வது போட்டி பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆட்டத்தின் இரண்டு பாதியிலும் பெங்கால் வாரியர்ஸ் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் டேக்கிள் ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளும் ஒரே புள்ளிகளை பெற்றன. முழு ஆட்ட நேர முடிவில் 46-34 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியது

பெங்கால் வாரியர்ஸ் அணி 26 ரெயிட், 12 டேக்கிள், 4 ஆல்அவுட்,4 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெறவில்லை.

யு மும்பா அணி 24 ரெயிட், 8 டேக்கிள், 2 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்ட்ரா புள்ளிகள், சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

யு மும்பா வீரர் ஷிவம் 11 ரெயிட் புள்ளிகளுடன் மொத்தமாக 11 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். பெங்கால் வாரியர்ஸ் வீரர் மணிந்தர் சிங் 7 ரெயிட், 3 போனஸ் என 10 புள்ளிகளை பெற்றார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் முதல் போட்டியில் யு மும்பா வென்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் ப்ளேஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்