PKL 2024: கடைசி அணியாக ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்த ஹரியானா! தொடரும் ஜெயப்பூர் வெற்றி பயணம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: கடைசி அணியாக ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்த ஹரியானா! தொடரும் ஜெயப்பூர் வெற்றி பயணம்

PKL 2024: கடைசி அணியாக ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்த ஹரியானா! தொடரும் ஜெயப்பூர் வெற்றி பயணம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 18, 2024 11:19 PM IST

பாட்னா அணிக்கு எதிரான சூப்பர் வெற்றி பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ், கடைசி அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பாட்னா பைரேட்ஸ் வீரரை வெளியே தள்ளும் ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் (இடது), தெலுங்கு டைட்டன்ஸ் வீரரிடமிருந்து தப்பிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்
பாட்னா பைரேட்ஸ் வீரரை வெளியே தள்ளும் ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் (இடது), தெலுங்கு டைட்டன்ஸ் வீரரிடமிருந்து தப்பிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்

இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. ரெயிட், டேக்கிள் ஆட்டத்திலும் ஒரே புள்ளிகளை பெற்றன. இதன் பின்னர் ரெயிட், டேக்கிள் என ஹரியானா முன்னிலை பெற்று இரண்டாம் பாதியை தன்வசம் ஆக்கியது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வர, முழு ஆட்ட நேர முடிவில் 39-32 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா அணி, பாட்னா அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் கடைசி அணியாக ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி. அதுவும் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் இந்த வெற்றி கிடைத்தது சிறப்பான விஷயமாக அமைந்தது.

இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 15 ரெயிட், 21 டேக்கிள், 2 ஆல்அவுட், 1 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெற்றது. பாட்னா பைரேட்ஸ் அணி 10 ரெயிட், 20 டேக்கிள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் புள்ளிகளை பெறவில்லை. இரண்டு சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது.

ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் சித்தார்த் தேசாய் 10 ரெயிட், 2 போனஸ் என 12 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். பாட்னா பைரேட்ஸ் வீரர் ரோகித் 10 ரெயிட் புள்ளிகளை மட்டும் பெற்றார்.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு மோதல்களில் முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸும், இரண்டாவது போட்டியில் ஹரியானா அணியும் வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்

ப்ரோ கபடி லீக் தொடர் 123வது போட்டி தெலுங்கு டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி முன்னிலை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ், ரெயிட், டேக்கிள் ஆட்டத்தில் ஜெய்ப்பூரை விட அதிக புள்ளிகளை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி அப்படியே தலைகீழாக மாறியது. ரெயிட், டேக்கிள் ஆட்டம் உள்பட புள்ளிக்கணக்கிலும் முன்னிலை பெற்றது ஜெய்ப்பூர். முழு ஆட்ட நேர முடிவில் 51-44 என்ற புள்ளி கணக்கில் ஜெயப்பூர் பிங்க் பேந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 28 ரெயிட், 12 டேக்கிள், 4 ஆல்அவுட், 7 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அத்துடன் 4 சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெற்றது

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 23 ரெயிட், 14 டேக்கிள், 4 ஆல்அவுட்,3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியும் பெற்றது.

தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் பவன் ஷெராவத் 15 ரெயிட், 4 டேக்கிள், 3 போனஸ் என 22 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர் அர்ஜுன் தேஷ்வால் 7 ரெயிட், 9 போனஸ் என 16 புள்ளிகளை பெற்றார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகவும் மோசமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.