பிகேஎல் 2025 ஏலம் இரண்டாவது நாள்! அதிக விலைக்கு ஏலம்.. சாதனை படைத்த ஆனில் மோகன் - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  பிகேஎல் 2025 ஏலம் இரண்டாவது நாள்! அதிக விலைக்கு ஏலம்.. சாதனை படைத்த ஆனில் மோகன் - முழு விவரம்

பிகேஎல் 2025 ஏலம் இரண்டாவது நாள்! அதிக விலைக்கு ஏலம்.. சாதனை படைத்த ஆனில் மோகன் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 03, 2025 04:58 PM IST

பிகேஎல் சீசன் 12 ஏலத்தில் புதிய Final Bid Match விதி மூலம் இரு சீசன்களுக்கு 5 வீரர்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டனர். சீசன் 12க்கான அணியமைப்பில் பிரான்சைஸ்கள் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது

பிகேஎல் 2025 ஏலம் இரண்டாவது நாள்! அதிக விலைக்கு ஏலம்.. சாதனை படைத்த ஆனில் மோகன் - முழு விவரம்
பிகேஎல் 2025 ஏலம் இரண்டாவது நாள்! அதிக விலைக்கு ஏலம்.. சாதனை படைத்த ஆனில் மோகன் - முழு விவரம்

முதல் நாளில் 10 வீரர்கள் ரூ. 1 கோடியை தாண்டினர். இது சீசன் 10இன் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி புதிய பிகேஎல் ஏல் விழா சாதனையாக அமைந்தது.

புதிய விதியின் கீழ் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

முகமது ரேசா ஷட்லுயி மற்றும் தேவங்க் தலால் ஆகியோர் முறையே ஏ பிரிவின் ஆரம்பம் மற்றும் முடிவில் ரூ. 2 கோடி கிளப்பில் இணைந்தனர். புதிய Final Bid Match விதியின் மூலம் ஆஷு மாலிக் (தபாங் டெல்லி), தீபக் சிங் (பாட்னா பைரேட்ஸ்), முகமது அமான் (புனேரி பல்தான்), ஹர்தீப் மற்றும் கஞ்சிய ரோகா மகர் (ஹரியானா ஸ்டீலர்ஸ்) ஆகியோர் இரு சீசன்களுக்கு மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

வரலாறு படைத்த ஆனில் மோகன்

பிரிவு டி-இல் அதிர்ச்சி தரும் மாற்றமாக ஆனில் மோகன் ரூ. 78 லட்சத்தில் யு மும்பா அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பிரிவில் இதுவரை இல்லாத மிக உயர்ந்த விலை இதுவாக அமைந்துள்ளது. மொத்தமாக பிகேஎல் 12 வீரர் ஏலத்தில் ரூ. 3.90 கோடி செலவிடப்பட்டுள்ளது

பிகேஎல் ஏல விற்பனையின் இரண்டாம் நாள் மிக பெரிய அதிரிச்சியாக ஆனில் மோகன் தேர்வு செய்யப்பட்டது தான். ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இந்த ஆல்-ரவுண்டர் சி மற்றும் டி பிரிவுகளில் இருந்தவர்களில் அதிகபட்ச விலை பெற்றார். இவருக்கு பிறகு ஜெயப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியினரால் ரூ. 50.10 லட்சத்துக்கு உதேய் பார்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஷால் ஸ்போர்ட்ஸின் வணிக தலைவர் மற்றும் பிகேஎல் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி, " பிகேஎல் 12 ஏல விற்பனையின் இரண்டாவது நாளிலும் உற்சாகம் தொடர்ந்தது என்பது சந்தோஷமான விஷயம் தான். குறிப்பாக சி மற்றும் டி பிரிவுகளில் புதிய வீரர்கள் மீது அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 78 லட்சத்தில் ஆனில் மோகனை தேர்ந்தெடுத்தது இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு புதிய வீரர்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வது நீண்டகால போட்டி குழுவை உருவாக்க முக்கியமான விஷயமாக திகழ்கிறது. மேலும் 10 பேர் கோடிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சந்தை சமநிலையை காட்டுவதாக" கூறினார்.

வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன்

"பிகேஎல் போட்டிகளில் விளையாடுவது என் கனவு. இப்போது அது நிறைவேறி இருக்கிறது. எனது கடின உழைப்பு மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னை தேர்ந்தெடுத்த யு மும்பாவுக்கு நன்றிகள். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். ஏற்கனவே பல ரெய்டிங் ஸ்டார்கள் மும்பா வழியாக வந்துள்ளனர். நானும் அவர்களின் பாதையில் செல்வேன்" என்று ஆனில் மோகன் கூறியுள்ளார்.

ஏ பிரிவு டாப் 5 வீரர்கள்

பெயர்நாடு அணி தொகை
முகமது கரசா ஷட்லுயிஈரான்குஜராத் ஜெயண்ட்ஸ்ரூ. 2.23 கோடி
தேவங்க் தலால்இந்தியாபெங்களுரு வாரியர்ஸ்ரூ. 2.2 கோடி
ஆஷு மாலிக்இந்தியாதபாங் டெல்லிரூ. 1.90 கோடி
அர்ஜுன் தேஷ்வால்இந்தியாதமிழ் தலைவாஸ்ரூ. 1.40 கோடி
யோகேஷ் டாஹியாஇந்தியா பெங்களுரு புல்ஸ்ரூ. 1.12 கோடி

பி பிரிவு டாப் 5 வீரர்கள்

பெயர்நாடுதொகைஅணி
அங்கித் ஜக்லான்இந்தியாரூ. 1.57 கோடிபாட்னா பைரேட்ஸ்
நவீன் குமார்இந்தியாரூ. 1.20 கோடிஹரியானா ஸ்டீலர்ஸ்
குமன் சிங்இந்தியாரூ. 1.07 கோடியுபி யோதாஸ்
சச்சின் தன்வார்இந்தியாரூ. 1.05 கோடிபுனேரி பல்தான்
நிதின் குமார் தன்கார்இந்தியாரூ. 1.02 கோடிஜெயப்பூர் பிங்க் பேந்தர்ஸ்

சி பிரிவு டாப் 5 வீரர்கள்

பெயர்நாடுஅணிதொகை
ஆகாஷ் சிந்துஇந்தியாபெங்களுரு புல்ஸ்ரூ. 53.10 லட்சம்
நிதின் ராவல்இந்தியாஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்ரூ. 50 லட்சம்
சந்தீப் குமார் இந்தியாயு மும்பாரூ. 49 லட்சம்
குர்தீப்இந்தியாபுனேரி பல்தான்ரூ. 47.10 லட்சம்
தீரஜ்இந்தியாபெங்களுரு புல்ஸ்ரூ. 40.20 லட்சம்

டி பிரிவு டாப் 3 வீரர்கள்

பெயர்நாடுஅணிதொகை
ஆனில் மோகன்இந்தியாயு மும்பாரூ. 78 லட்சம்
உதய் பார்டேஇந்தியாஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்ரூ. 50.10 லட்சம்
சுபம் பிடாகேஇந்தியாபெங்களுரு பூல்ஸ்ரூ. 10 லட்சம்