Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களின் பயிற்சி! விளையாட்டு அமைச்சகம் ஒதுக்கிய நிதி - முழு விவரம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு அமைச்சகம் பெரும் தொகை நிதி ஒதுக்கியுள்ளது. இது அவர்களின் பயிற்சி மற்றும் தயாரிப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விளையாட்டு நிகழ்வாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழா மைதானத்தில் தொடங்காமல், பாரிஸ் உள்ள செய்ன் நதியின் கரையோர பகுதியில் தொடங்கவுள்ளது.
தொடக்க விழா நிகழ்வில் படகுகளில், 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை நகரத்தின் வழியாக அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய குழுவில், 16 விளையாட்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தும் விதமாகவும், பதக்க எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்திய விளையாட்டு அமைச்சகம் பல கோடிகளை செலவழித்துள்ளது.
இந்தியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்காக, விளையாட்டு அமைச்சகம் செய்திருக்கும் முதலீடுகள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா
கடந்த டோக்கிய ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சாம்பியன் வீரரான நீரஜ் சோப்ரா பட்டியாலாவில் உள்ள SAI NSNIS மற்றும் ஐரோப்பாவில் பயிற்சி பெறுகிறார். விளையாட்டு அமைச்சகம் இவருக்கு மொத்தம் ரூ.5.72 கோடியை செலவழித்துள்லது. நீரஜ் சோப்ரா பாரிஸில் கண்டிப்பாக பட்டத்தை தக்கவைப்பார் என முழுமையாக நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
டோக்கியோவில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, நாட்டின் 41 ஆண்டுகால பதக்க வறட்சியை வெண்கலத்துடன் முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த முறையும் பதக்க வெற்றி உறுதி செய்ய ஹாக்கி வீரர்களுக்கு, பெங்களுருவில் உள்ள SAI NCOEஇல் உள்ள ஹாக்கி நன்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஹாக்கி அணிக்காக விளையாட்டு அமைச்சகம் ரூ.41.81 கோடி முதலீடு செய்துள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களின் பயிற்சிக்காக விளையாட்டு அமைச்சகம் ரூ.5.62 கோடி அளித்துள்ளது
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து
பிவி சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார். இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கும் பிவி சிந்து பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கத்தை இலக்காக வைத்துள்ளார். பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்ற இவருக்கு ரூ. 3.13 கோடி விளையாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
இளம் பேட்மிண்டன் வீராங்கனை மீராபாய் சானு
காயத்தால் அவதிப்பட்டு வரும் மீராபாய் சானுவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் கடினமான நேரமாக இருக்கும் என தெரிகிறது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இவருக்கு விளையாட்டு அமைச்சம் ரூ. 2.74 கோடி ஒதுக்கிய நிலையில், பாட்டியாலாவில் உள்ள SAI NSNISஇல் பயிற்சி பெற்றார்.
துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட போதிலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் அதை அடைவார் என்கிற நம்பிக்கை ஏற்படுத்திய நட்சத்திரமாக மனு பாக்கர் உள்ளார. இவருக்கு ரூ. 1.68 கோடி விளையாட்டு அமைச்சகம் ஒதுக்கீடு செய்ய, புது டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் ஷுட்டிங் தளத்தில் பயிற்சி பெற்றார்.
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சிஃப்ட் கெளர் சாம்ரா
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் தங்கம் வென்று சாதனை புரிந்த சிஃப்ட் கெளர் சாம்ரா, அந்த பார்மை ஒலிம்பிக்கிலும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு விளையாட்டு அமைச்சகம் ரூ. 1.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா
இந்திய டென்னிஸில் ஜாம்பவான் வீரரான இவர் பாரிஸில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 44 வயதான போபண்ணாவுக்கு விளையாட்டு அமைச்சகம் ரூ.1.56 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா
பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக இருந்து வரும் மனிகா பத்ராவுக்கு விளையாட்டு அமைச்சகம் ரூ. 1.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது
குத்துச்சண்டை வீராங்கனைகள் நிகத் ஜரீன், லவ்லினா போரோகோஹைன்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை கடைசி கட்டத்தில் பெற்றார் ஜரீன். லோவ்லினா ஏற்கனவே ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுள்ளார். பதக்க நம்பிக்கைகளாக இருக்கும் இவர்கள் இருவருக்கும் முறையே ரூ.91.71 லட்சம் மற்றும் ரூ.81.76 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இவர், விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து ரூ. 70.45 லட்சம் நிதி உதவி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுக்காக அரசாங்கம் செலவு செய்திருக்கும் தொகை முழு விவரம்
வில்வித்தை: ரூ.39.18 கோடி
தடகளம்: ரூ.96.08 கோடி
பேட்மிண்டன்: ரூ.72.03 கோடி
குத்துச்சண்டை: ரூ 60.93 கோடி
குதிரையேற்றம்: ரூ.95.42 லட்சம்
கோல்ஃப்: ரூ 1.74 கோடி
ஹாக்கி: ரூ.41.30 கோடி
ஜூடோ: ரூ.6.33 கோடி
படகோட்டம்: ரூ.3.89 கோடி
விற்பனை: ரூ 3.78 கோடி
படப்பிடிப்பு: 60.42 கோடி
நீச்சல்: ரூ.3.90 கோடி
டேபிள் டென்னிஸ்: ரூ.12.92 கோடி
டென்னிஸ்: ரூ.1.67 கோடி
பளு தூக்குதல்: ரூ.27 கோடி
மல்யுத்தம்: ரூ.37.80 கோடி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்