Paris Olympics 2024,Rowing: படகு போட்டியில் நான்காவது இடம்! அரையிறுதி தகுதிக்கு இரண்டாவது வாய்ப்பை பெறும் இந்திய வீரர்
படகு ஓட்டும் போட்டியில் அரையிறுதி முன்னேறும் வாய்ப்பை பெற வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ரெபிசேஜ் சுற்றில் இந்திய படகு ஓட்டி வீரர் பால்ராஜ் பன்வாருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய வீரர்ரான பால்ராஜ் பன்வார் தொடக்கத்தில் முதல் இடத்தில் வந்தபோதிலும் இறுதியாக நான்காவது இடத்தை பிடித்தார். நான்கு விநாடிகளில் மூன்றாவது இடத்தை தவறவிட்டுள்ளார்.
ரெபெசேஜ் சுற்றில் இந்திய வீரர்
பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளில் ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல்ஸ் போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் பால்ராஜ் பன்வார் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனாலும் அவரால் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற முடியாமல் போயுள்ளது.
இந்த பிரிவு விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாடும் ஒரே வீரராக பால்ராஜ் பன்வார் திகழ்கிறார். இதையடுத்து ஹீட்ஸ் போட்டியில் 7:07.11 விநாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
நியூசிலாந்தின் தாமஸ் மெக்கிண்டோஷ் (6:55.92), ஸ்டெபனோஸ் என்டோஸ்கோஸ் (7:01.79) மற்றும் அப்தெல்கலெக் எல்பன்னா (7:05.06) ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். நான்காவது இடத்தை பிடித்திருக்கும் பால்ராஜ் பன்வா இந்திய வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற வரும் ஞாயிற்றுக்கிழமை ரிபெசேஜ் சுற்றில் இரண்டாவது வாய்ப்பைப் பெறுவார்.
இரண்டாவது படகோட்டி வீரர் பால்ராஜ் பன்வார்
நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் படகோட்ட போட்டியில் பயிற்சியை பெற்ற பால்ராஜ் பன்வார் இந்தியாவின் இரண்டாவது பிரதிநிதியாகத் திகழ்கிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். தென் கொரியாவில் நடந்த ஆசிய மற்றும் ஓசியானிய ரோயிங் ஒலிம்பிக் தகுதி ரேகாட்டாவில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
பால்ராஜ் பன்வார் சவாலான ஆட்டம்
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள கைம்லாவைச் சேர்ந்த 25 வயதான ராணுவ வீரர் பால்ராஜ், முதல் இடத்தை பிடித்த மெக்கிண்டோஷை காட்டிலும் முன்னிலை பெற்று , வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர் அவர் மூன்றாவது இடத்துக்கு பின் தங்கினார். மூன்றாவது இடத்தை பிடித்த எல்பன்னா முந்திய போது அவருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தார். ஆனால் இறுதியில் இறுதியில் நான்காவது இடத்தை பிடித்தார்.
இந்த நிகழ்வின் விதிகளின்படி, முதல் மூன்று இடத்தை பிடித்தவர்கள் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறுவார்கள். மீதமுள்ளவர்கள் ரெப்சேஜ் சுற்றுக்கு செல்வார்கள். ரெபெசேஜ் ஹீட்ஸ் வீரர்களுக்கான இரண்டாவது வாய்ப்பாக அமையும்.
ஒவ்வொரு ரெபெசேஜ் ஹீட்ஸிலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வீரர்கள் காலிறுதிக்கு செல்வார்கள். ஒற்றையர் ஸ்கல்ஸ் நிகழ்வு பல சுற்றுகளைக் கொண்டுள்ளது. இது 2012 ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து-சுற்று வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் கோலாகல தொடக்கம்
ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. வீரர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என ஒலிம்பிக் தொடக்க விழா களைகட்டியது. மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்