Paris Olympics 2024 Day 1: கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்..! முதல் நாளில் இந்தியா போட்டிகள் முழு அட்டவணை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியிருக்கும் நிலையில் முதல் நாளில் இந்தியா மற்றும் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு அட்டவணை தெரிந்து கொள்ளலாம்
பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் வண்ணமயமான தொடக்க விழா நிகழ்வுகளுடன் கோலகமாக தொடங்கியுள்ளது. இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் இன்று முதல் வரும் ஆக்ஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்வில் பிரபல ஹாலிவுட் பாடகியான லேடி காகா இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதலில் துப்பாக்கி சுடுதல்
ஒலிம்பிக் தொடக்கவிழாவுக்கு பின் முதல் நாள் நிகழ்வில் ஆரம்பித்திலேயே, 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணியுடன் இந்தியா தனது போட்டியை தொடங்குகிறது. ரமிதா ஜிண்டால்-அர்ஜுன் பாபுடா மற்றும் இளவேனில் வளரிவன்-சந்தீப் சிங் ஆகியோர் இந்த நிகழ்வில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையை சுமந்து செல்கிறார்கள்.பதக்கப் போட்டிகள் நாளின் பிற்பகுதியில் நடைபெறவுள்ளன.
தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பதக்கப் போட்டிகளுக்குச் செல்லும். இதில் ஒன்று மற்றும் இரண்டில் இடம் பெறும் அணிகள் தங்கத்துக்காகவும், இரண்டு வெண்கலத்துக்காகவும் போட்டியிடும்.
அர்ஜூன் சிங் சீமா, சரஜ்போட் சிங், மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிகளிலும் விளையாடுவார்கள், முதல் நாள் மட்டுமே தகுதிச் சுற்றுகளை நடத்துவார்கள்.
முதல் நாளில் இந்தியா மற்றும் இந்திய வீரர்களின் முழு அட்டவணை
பேட்மிண்டன் விளையாட்டு
ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம்: லக்ஷயா சென் vs கெவின் கார்டன் (குவாத்தமாலா) (இரவு 7:10 மணி )
ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம்: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி எதிராக லூகாஸ் கோர்வி மற்றும் ரோனன் லாபர் (பிரான்ஸ்) (இரவு 8 மணி ).
பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம்: அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ vs கிம் சோ யோங் மற்றும் காங் ஹீ யோங் (கொரியா) (இரவு 11:50 மணி)
குத்துச்சண்டை
பெண்களுக்கான 54 கிலோ தொடக்க சுற்றுப் போட்டி: ப்ரீத்தி பவார் vs தி கிம் அன் வோ (வியட்நாம்) (ஜூலை 28 நள்ளிரவு 12.05).
ஆண்கள் ஹாக்கி
பி பூல் போட்டி: இந்தியா vs நியூசிலாந்து (இரவு 9 மணி )
டேபிள் டென்னிஸ்
ஆண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று: ஹர்மீத் தேசாய் vs ஜோர்டானின் ஜைத் அபோ யமன் (இரவு 7:15 மணி)
டென்னிஸ்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டம்: ரோஹன் போப்னா மற்றும் என் ஸ்ரீராம் பாலாஜி vs எட்வர்ட் ரோஜர்-வாசெலின் மற்றும் ஃபேபியன் ரெபோல் (பிரான்ஸ்) (பிற்பகல் 3:30 மணி )
பாரிஸ் ஒலிம்பிக் 2024 எத்தனை நாள்கள்?.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஏற்கனவே ஜூலை 24 ஆம் தேதி தொடங்கிவிட்டன, தொடக்க விழா ஜூலை 26, தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 11 வரை இரண்டு வார காலங்கள் நடைபெறுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 எங்கு நடைபெறுகிறது?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெறுகிறது. சில நிகழ்வுகள் பிரான்சின் பிற நகரங்களில் நடைபெறும்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024ஐ இந்தியாவில் நேரடி ஒளிபரப்பை எங்கு காணலாம்?
ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் மூலம் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கை தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
அதேபோல், பாரிஸ் ஒலிம்பிக்கின் நேரடி ஸ்ட்ரீமிங் JioCinemaவில் நேரலைாக கண்டு ரசிக்கலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்