தமிழ் செய்திகள்  /  Sports  /  On This Day South Africa Cricket Team Former Captain Hansie Croje Died In Flight Crash

Hansie Cronje: தென்ஆப்பரிக்கா வென்றிருக்கும் ஒரே ஐசிசி கோப்பையை பெற்ற கேப்டன்!விமான விபத்தில் உயிரை விட்ட ஹான்சி குரோனி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 01, 2023 05:15 AM IST

தென்ஆப்பரிக்கா அணியை கண்டு மற்ற அணிகளை அச்சப்பட வைத்ததில் ஹான்சி குரோனியின் பங்கு முக்கியமானது. துர்தஷ்டவசமாக சூதாட்ட புகாரில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்ட இவரது இறப்பும் விமான விபத்தில் நிகழ்ந்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த தென்ஆப்பரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஹான்சி குரோனி
விமான விபத்தில் உயிரிழந்த தென்ஆப்பரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஹான்சி குரோனி

ட்ரெண்டிங் செய்திகள்

இடைப்பட்ட காலத்தில் எத்தனையே கேப்டன்கள் அணியை வழிநடத்த, ஐசிசி கோப்பையை பெறுவதற்கு கைகூடிய பல்வேறு வாய்ப்புகளையும் தவறவிட்டனர்.

ஆனால் ஐசிசி சார்பில் முதல் முறையாக மினி உலகக் கோப்பை என்ற பெயரில் 1998இல் நடத்தப்பட்ட ஐசிசி நாக்அவுட் கோப்பையை தென்ஆப்பரிக்கா அணிக்காக முதல் முறையாக வென்று கொடுத்தவர் ஹான்சி குரோனி. பலம் வாய்ந்த் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்ஆப்பரிக்கா இந்த வெற்றியை பெற்றது. தென் ஆப்பரிக்கா அணியின் பெஸ்ட் கேப்டன் என்று குறிப்படும் அளவில் பல முக்கியமான போட்டிகளில் அணியை நன்கு வழிநடத்தி வெற்றியை தேடிதந்துள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை என உலகக் கோப்பை வென்ற அணிகளுக்கு பயத்தை காட்டும் விதமாக குரோனியின் கேப்டன்சி அப்போதைய தென்ஆப்பரிக்கா அணி பேட்டிங், பெளலிங், குறிப்பாக பீல்டிங்கில் டாப் கிளாஸ் அணியாக ஜொலித்தது.

குரோனி தென்ஆப்பரிக்கா அணிக்காக 1992 முதல் 2000 காலகட்டத்தில் 41 டெஸ்ட் போட்டிகள், 138 ஒரு நாள் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார் குரோனி. இதில் 27 டெஸ்ட் வெற்றி, 11 தோல்வியும், 99 ஒரு நாள் போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் லிஸ்டில் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், எம்எஸ் தோனி ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார். கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு வீரராகவும் அணிக்கு தேவையான பங்களிப்பை கொடுப்பதில் குரோனி தவறியதில்லை.

சிறந்த பேட்டிங் ஆல்ரவுண்டரான குரோனி, பல்வேறு போட்டிகளில் மேட்ச் வின்னராகவும், பினிஷராகவும் இருந்துள்ளார். ஸ்லோ மீடியம் பேஸில் இவரது பெளலிங் பாரக்க எளிமையாக இருந்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிக்ககூடியதாகவே இருந்துள்ளது.

கடந்த 2000ஆவது ஆண்டில் இந்தியாவை சேர்ந்த பந்தய கும்பல் பிரதிநிதி சஞ்சீவ் சாவ்லாவுடன் நிகழ்ந்த உரையாடலை வைத்து ஹான்சி குரோனி மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இவருடன் மற்ற தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வீரர்களான ஹெர்செல் கிப்ஸ், நிக்கி பேயே, பிட்டர் ஸ்டைடோம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிங் கமிஷன் குரோனிக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த குரோனியின் மனு நிராகரிக்கப்பட்டது.

ஜூன் 1, 2022 அன்று தனி விமானத்தில் ஜோகன்னஸ்பெர்கில் இருந்து ஜார்ஜ் நகருக்கு சென்றார் குரோனி. விமானம் ஏர்போர்ட் அருகே சென்றபோது மேகமூட்டம் காரணமாக விமானிகளுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட நிலையில், தரையிறங்க முடியாமல் அந்த பகுதியில் சுற்றினர். அப்போது விமான நிலையத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த குரோனி உள்பட இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

தென்ஆப்பரிக்காவில் உள்ள ப்ளூம்ஃபோன்டைன் நகரில் பிறந்த குரோனி, பெர்தா ஹான்ஸ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. மனைவி இறந்த நிலையில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் குரோனி.

2008இல் ஹான்சி: ஏ ட்ரூ ஸ்டோரி என்கிற பெயரில் குரோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. 32 வயதில் உயிரிழந்த குரோனி தென் ஆப்பரிக்காவின் பெஸ்ட் கேப்டனாக இன்றளவும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறார். கிரிக்கெட்டை விட்டு விலகிய பின்னர் ரசிகர்களின் பேரதரவை பெற்ற குரோனியின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

WhatsApp channel

டாபிக்ஸ்