October Sports Rewind: ஆசிய கேம்ஸ் முதல் உலகக் கோப்பை தொடர் வரை.. அக்டோபரில் முக்கிய நிகழ்வுகள்
அக்டோபர் மாதம் முழுவதும் விளையாட்டுத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.
ஆசிய கேம்ஸ், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என பல முக்கிய நிகழ்வுகள் விளையாட்டுத் துறையில் நடந்தது. அவை என்னென்ன என சுருக்கமாக பார்ப்போம்.
அக்.1: ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 8 நிமிடம் 19.50 விநாடிகளில் இலக்கை எட்டி போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார்.
கோல்ஃப் விளையாட்டில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அதிதி அசோக்.
அக். 2: ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியா வெண்கலம் வென்றது.
அக். 3: ஆசிய கேம்ஸ் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது. ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வடகொரியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து, டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி வெண்கலப் பதக்கம் வென்றனர்.
அக். 4:ஆசிய விளையாட்டுப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அக். 5: ஆசிய கேம்ஸில் ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி கண்டது.
அக். 6: இந்தியா-வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கேம்ஸ் கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ருதுராஜ் தலைமையிலான இந்தியா.
அக். 7: தென்னாப்பிரிக்கா அணி இலங்கையுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தது. இதுவே ஒரு அணி உலகக் கோப்பையில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவே வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்கினார்.
ஆசிய கேம்ஸில் 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்று இந்திய புதிய வரலாறு படைத்தது.
அக். 8: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையில் வீழ்த்தியது.
அக். 9: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து.
அக். 10: இங்கிலாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் 345 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து சேஸிங்கில் புதிய சாதனையைப் படைத்தது பாகிஸ்தான்.
அக். 10: ஃபின்லாந்தில் நடைபெற்ற ஆர்க்டிக் ஓபன் 2023 மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை தோற்கடித்தார்.
அக். 11: உலகக் கோப்பையில் அதிக சதங்களை பதிவு செய்தவர் ரோகித் சர்மா. இவர் சச்சின் டெண்டுல்கரின் இந்தச் சாதனையை முறியடித்தார். ஆப்கனையும் இந்தியா வீழ்த்தியது.
அக். 12: தென் ஆப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் கேரள அணிக்கான கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக். 13: நியூசிலாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை இந்தத் தொடரில் ருசித்துள்ளது.
அக். 14: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா அசத்தல் வெற்றி கண்டது.
அக். 15: ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
அக். 16: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
ஹாக்கி தமிழ்நாடு சார்பில் 6 மாநில அணிகள் பங்கேற்கும் தென்மண்டல சப்-ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அக். 17 இல் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அக். 17: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 15-வது ஆட்டத்தில் நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
அக். 18: ICC ODI பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கணிசமான முன்னேற்றத்தை அடைந்து, சமீபத்திய புதுப்பிப்பில் ஐந்து இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
உருகுவேயில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பிரேசிலின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தபோது, இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய நெய்மர் கண்ணீருடன் இருந்தார்.
அக். 19: இந்திய அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 4வது வெற்றியை ருசித்தது.
அக். 20: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வென்றது.
அக். 21: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி கண்டது.
நெதர்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது இலங்கை.
அக். 22: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 5வது வெற்றியை உலகக் கோப்பை 2023 தொடரில் பதிவு செய்தது.
அக். 23: சென்னையில் நடந்த பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கன் வெற்றி கண்டது.
அக். 24: 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீ-டி20 போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்று புதிய ஆசிய பாரா சாதனை மற்றும் விளையாட்டு சாதனையை படைத்தார்.
அக். 25: ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்தை பந்தாடியது. மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காண்பித்தார். வார்னரும் சதம் பதிவு செய்தார்.
அக். 26: இந்தியா 72 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 73 பதக்கங்களை வென்றுள்ளது.
அக். 27: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 26வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
அக். 28: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 27வது ஆட்டத்தில் ஆஸி., வென்றது. நியூசிலாந்து போராடி தோற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 28வது போட்டியில் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து, அரையிறுதி வாய்ப்பும் வங்கதேசத்திற்கு பறிபோனது.
அக். 29: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா. தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்தது.
அக். 30: பாகிஸ்தான் பவுலர்களைக் காட்டிலும் இந்திய பவுலர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆபத்தானவர் என்று புகழ்ந்தார் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்