மாட்ரிட் ஓபன் டென்னிஸ்.. முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் நோவக் ஜோகோவிச்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் ஜோக்கோவிச்சை வீழ்த்தினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்.. முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் நோவக் ஜோகோவிச் (REUTERS)
மாட்ரிட் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் தோல்வியடைந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தனது கடைசி மாட்ரிட் ஓபன் போட்டியில் விளையாடியதாக தெரிவித்துள்ளார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மான்டே கார்லோவில் அலெஜான்ட்ரோ டபிலோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் நான்காவது தரவரிசையில் உள்ள ஜோகோவிச் தொடர்ச்சியாக இரண்டாவது தொடக்க தோல்வியை சந்தித்தார்.
