தமிழ் செய்திகள்  /  Sports  /  Nostalgia: An Olympic Medal Became An Obsession

Nostalgia: ஒரு நீச்சல் வீரரின் கனவாகிப்போன ஒலிம்பிக் பதக்கம்- நினைவலைகள்

I Jayachandran HT Tamil
Dec 03, 2022 11:12 PM IST

கின்னஸ் உள்பட பல்வேறு சாதனைகளைப் படைத்து அர்ஜுனா விருதையும் பெற்ற தமிழக நீச்சல் வீரரின் கனவாகிப் போன ஒலிம்பிக் பதக்கம் பற்றிய நினைவலைகள் இது.

நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன்
நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன்

ட்ரெண்டிங் செய்திகள்

* 90களில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரிச்சியமான பெயர்களில் ஒன்று குற்றாலீசுவரன்.

* ஒரு 13 வயது சிறுவனைக் கொண்டாடித்தீர்த்துக்கொண்டிருந்தது தமிழகம். ஈரோட்டைச் சேர்ந்த குற்றாலீசுவரன், உலக அரங்கில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திக்காட்டியதே அதற்குக் காரணம்.

* கிரிக்கெட் மோகத்தில், பேட்டும், கையுமாக மைதானங்களை நோக்கிச் சிறுவர்கள் படையெடுத்துக்கொண்டிருந்தபோது, குற்றாலீசுவரன், கடல்களைக் கடந்து கொண்டிருந்தார்.

* அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பொருளாதார உதவியால், பாக் ஜலசந்தியை நீந்திக்கடந்தபோது, ஒவ்வொரு தமிழரும், தங்கள் குடும்பத்து பிள்ளையாக, மானசீகமாகக் குற்றாலீசுவரனை அணைத்துக்கொண்டிருந்தனர்.

* 1997ம் ஆம் ஆண்டில், 6 கடல்களை நீந்திக்கடந்து கின்னஸ் சாதனை படைத்த குற்றாலீசுவரனுக்கு, இந்திய அரசு அர்ஜுனா விருது அளித்துக் கவுரவித்தது.

* சரி இப்போது குற்றாலீசுவரன் எங்கே இருக்கிறார்? இந்தக் கேள்வியே உங்களை அதிரச்செய்யலாம். ஆம், ஒரு காலத்தில் குழந்தைகளின் கனவு நாயகனாக இருந்த குற்றாலீசுவரன், இப்போது வெளிநாடு ஒன்றில் வங்கி அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

* எத்தனை வலியோடும், வேதனையோடும், அவர் தனது கனவை விட்டுச்சென்றிருப்பார் என்பதை நினைத்தாலே நமக்கும் கவலை கவ்விக்கொள்கிறது.

* அரசு உதவி கிடைத்த போதும், கல்வியை தொடர்வதற்காக, சிறிது காலம் தனது கனவான நீச்சலை விட்டு விலகியிருந்த போதும், இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

* ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும், சாதனைக்குப் பின்னும், பெரும் பொருளாதார நெருக்கடி இருந்ததால், ஸ்பான்சர்களை தேடி அலைய வேண்டி இருந்தது குற்றாலீசுவரனுக்கும், அவரது தந்தையான வழக்கறிஞர் ரமேஷுக்கும்.

* ஸ்பான்சர்கள் கிடைக்காத நிலையில், கனவை ஒதுக்கிவிட்டு, கல்வியை தேர்வு செய்த குற்றாலீசுவரன், பொறியியல் பட்டம் பெற்று தற்போது, கனடாவில் பணியாற்றி வருகிறார்.

* கனவுகள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், அது எல்லோருக்கும் நனவாகிவிடுவதில்லை. நனவான சில பேருக்கு மட்டுமே தெரியும், அதற்காக எத்தனை நாட்கள் தூக்கத்தை தொலைத்திருப்பார்கள் என்று.

* குற்றாலீசுவரன் விலகிவிட்டாலும், அவர் பங்கேற்ற போட்டி இன்றும் தொடர்கிறது. அடுத்தவரை அந்த இடத்திற்கு கொண்டு வருவது அத்தனை எளிதான காரியம் அல்லவே.

WhatsApp channel