Neymar: 56 மில்லியன் பவுண்ட் செட்டில்மெண்ட்.. அல் கிலால் அணியில் இருந்து விலகிய நெய்மார் - அடுத்து என்ன?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Neymar: 56 மில்லியன் பவுண்ட் செட்டில்மெண்ட்.. அல் கிலால் அணியில் இருந்து விலகிய நெய்மார் - அடுத்து என்ன?

Neymar: 56 மில்லியன் பவுண்ட் செட்டில்மெண்ட்.. அல் கிலால் அணியில் இருந்து விலகிய நெய்மார் - அடுத்து என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2025 04:44 PM IST

Neymar: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் 2034 கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சவுதி அரேபியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடைய அல் ஹிலால் கிளப் அணி அவருக்கான செட்டில்மெண்ட் தொகையை வழங்கியுள்ளது.

56 மில்லியன் பவுண்ட் செட்டில்மெண்ட்..அல் ஹிலால் அணியில் இருந்து விலகிய நெய்மார்
56 மில்லியன் பவுண்ட் செட்டில்மெண்ட்..அல் ஹிலால் அணியில் இருந்து விலகிய நெய்மார் (REUTERS)

கடந்த 2023ஆம் ஆண்டில் 77.6 மில்லியன் பவுண்ட் என்கிற மிகப் பெரிய தொகையில் அல் ஹிலால் அணியினரால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல்வேறு உலக ஸ்டார் வீரர்கள் ஜொலித்து வரும் சவுதி லீக்கில் மின்னாத நட்சத்திரமாக திகழ்ந்தார் நெய்மார். காயத்தால் அடிக்கடி அவதிப்பட்டதால் நெய்மாரால் இந்த லீக்கில் தனது இருப்பை வெளிக்காட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. சவுதி புரொ லீக்கில் 7 ஆட்டங்களில் மட்டும் விளையாடியிருக்கும் நெய்மார் ஒரேயொரு கோல் மட்டும் அடித்துள்ளார்.

சவுதி அரேபியா தூதராக நியமனம்

2034 கால்பந்து உலகக் கோப்பைக்கு சவுதி அரேபியாவின் விளம்பர தூதராக நெய்மார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தங்களது அணியில் இருந்த வெளியேறி இருக்கும் நெய்மாருக்கு 5.37 மில்லியன் பவுண்ட் வரை செட்டில்மெண்ட் தொகையை அல் ஹிலால் அணி நிர்வாகம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல் ஹிலால் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் ஆண்டுக்கு 83.74 மில்லியன் பவுண்ட்கள் வரை நெய்மார் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக 125.61 மில்லியன் பவுண்ட்கள் அந்த அணியின் இருந்த 18 மாத காலத்தில் அவர் சம்பாதித்துள்ளாராம். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப்பில் இருந்து வெளியேறிய பிறகு நெய்மார் கால்பந்து கேரியரில் மிக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

நீண்ட கால விருப்பம்

அல் ஹிலால் அணியில் இருந்து வெளியேறியிருப்பது தொடர்பாக விடியோ மூலம் தெரிவித்துள்ளார் நெய்மார். இதுதொடர்பாக அவர் பகிர்ந்திருக்கும் விடியோவில், "நண்பர்களே. நான் காலத்தின் பின்னோக்கிச் செல்வது போல் இருக்கிறது. என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இங்கே இருக்கிறேன், அவர்கள் சில விஷயங்களை எழுத எனக்கு உதவினார்கள். என் குடும்பத்தினருக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்கனவே என் முடிவு தெரியும்.

நான் சாண்டோஸுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன். இந்த தருணம் நிறைவேற வேண்டும் என்று நீண்ட காலமாக விரும்பினேன். இந்த தருணத்தில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் என் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

எனக்கான சவால்களை சாண்டோஸ் மட்டும் வழங்கும்

உலகின் மிகவும் பிரபலமான கிளப்புக்கு இருந்து வெளியேறி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் அது நேற்று போல் தெரிகிறது. கிளப் மற்றும் ரசிகர்கள் மீதான எனது உணர்வுகள் ஒருபோதும் மாறவில்லை.

இப்போது நான் மீண்டும் அங்கு விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் சவால்களுக்குத் தயாராக எனக்கு தேவையான அன்பை சாண்டோஸ் போன்ற ஒரு கிளப்பால் மட்டுமே வழங்க முடியும்.

நீங்கள் அனைவரும் நான் என்ன சொல்கிறேன் என்பதை நன்கு அறிவீர்கள். என் வாழ்க்கையின் இந்த அடுத்த படியில் நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்

கால்பந்து விளையாட்டின் வாழ்க்கையை தொடங்கிய சாண்டோஸ் அணிக்கு திரும்பும் நெய்மார், முதல் முறையாக கோப்பை வென்றது அந்த அணியில் இருந்தபோது தான். அதன் படி, கோபா டோ பிரேசில் (2010), கேம்பியோனாடோ பாலிஸ்டா (2010, 2011, 2012), கோபா லிபர்டடோர்ஸ் (2011) மற்றும் ரெகோபா சுடமெரிகானா (2012) ஆகிய கோப்பைகளை வென்றார். அதேபோல் கேம்பியோனாடோ பாலிஸ்டா தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் (2009).

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.