பிகேஎல் ஏலத்தில் புதிய வரலாறு.. முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட 10 வீரர்கள் - முழு லிஸ்ட்
பிகேஎல் சீசன் 12 வீரர் ஏலத்தில் புதிய வரலாறாக, முதல் நாள் ஏலத்திலேயே 10 வீரர்கள் ரூ. 1 கோடிக்கு மேல் வாங்கப்பட்டனர். சீசன் 11ஐ காட்டிலும் இரண்டு மடங்கில் வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பது லீக்கின் வளர்ச்சி பாதையை வலியுறுத்தும் மைல்கல்லாக திகழ்வதாக கூறப்படுகிறது

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 வீரர் ஏலத்தின் முதல் நாள், இந்த விளையாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகப் பதியப்பட்டது. ஏலத்தின் தொடக்க நாளிலேயே 10 வீரர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் வாங்கப்பட்டனர். இது கடந்த சீசனின் ஐந்து கோடீஸ்வர வீரர்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையாகும். இதன் மூலம் பிகேஎல் வளர்ச்சி தெளிவாக பறைசாற்றப்படுகிறது.
ஏலத்தில் புதிய விதிமுறை
இரு முறை பிகேஎல் சாம்பியனாகவும், சீசன் 11இன் Most Valuable Playerஆகவும் விளங்கிய மொஹம்மத்ரேசா ஷாட்லூஇ, ரூ. 2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட் அணியினரால் வாங்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சீசன்களில் ரூ. 2 கோடிக்கு மேலான விலைக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பிகேஎல் 11இல் சிறந்த ரைடராக திகழ்ந்த தேவாங்க் தலால், பெங்கால் வாரியர்ஸ் அணியால் ரூ. 2.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிகேஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.