Paris Olympics 2024: தங்கத்தை தக்க வைக்க களமிறங்கும் நீரஜ் சோப்ரா! இந்திய தடகள அணி முழு விபரம்
ஒலிம்பிக்கில் வென்ற தங்க பதக்கத்தை தக்க வைக்க இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனக்கான போட்டியில் இன்று களமிறங்கவுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 2024க்கான தடகள விளையாட்டில் இந்தியாவின் முழு அட்டவணை, இந்திய தடகள அணியின் விபரம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையில் முக்கியமானவராக இருப்பவர் நீரஜ் சோப்ரா. பையனுக்காக ஒரு சிறப்பு ஆதரவாளர் காத்திருக்கிறார். இவரது ஆட்டத்தை காண்பதற்காகவே கேரள மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரிஸை நோக்கி ஒருவர் சைக்களில் பயணத்தை மேற்கொள்ள தொடங்கவிட்டார். அதன்படி 22,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து தற்போது நீரஜ் ஆட்டத்தை அந்த நபர் பார்க்கவுள்ளார்.
கடந்த 2022, ஆகஸ்ட் 15, இந்தியாவின் சுதந்திர தின சிறப்பு நாளில் தனது பயணத்தைத் தொடங்கிய ஃபாயிஸ் அஸ்ரஃப் அலி என்கிற கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர், ஒலிம்பிக் விளையாட்டை காண்பதற்காக 30 நாடுகளில் பயணம் செய்தார்.
தடகள போட்டிகள் தொடக்கம்
2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 29 பேர் கொண்ட வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய தடகள அணிக்கு நீரஜ் தலைமை தாங்குகிறார். ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் தலைமையில், 16 பதக்க நிகழ்வுகளில் இந்த பதக்க வேட்டைக்காக களமிறங்க இருக்கிறார்கள். ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் தடகள போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து டிராக் மற்றும் ஃபீல்டு நிகழ்வுகளுக்கும் ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.