National Games 2025: ஒலிம்பிக் வெற்றியாளர்களை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்ற 15 வயது சிறுவன்.. வெற்றியாளர்கள் லிஸ்ட்!
National Games 2025: ஒலிம்பிக் வெற்றியாளர் சரப்ஜோத் சிங் உள்பட டாப் வீரர்களை முந்தி 240.7 புள்ளிகளை பெற்ற 15 வயது இளம் வீரர் ஜோனாதன் அந்தோணி தனது முதல் சீனியர் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். மகளிர் பிரிவில் ஒலிம்பிக் வீராங்கனையான சிஃப்ட் கெளர் சாம்ரா பதக்கம் வென்றுள்ளார்.

38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஒலிம்பியன்களை விஞ்சி தங்கப் பதக்கம் வென்ற 15 வயது துப்பாக்கி சுடும் வீரர் ஜோனாதன் அந்தோணி, அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அந்தோணி தனது முதல் சீனியர் தேசிய தங்கப் பதக்கத்தை 240.7 புள்ளிகளுடன் வென்றுள்ளார். சர்வீசஸை சேர்ந்த ரவீந்தர் சிங் (240.3) மற்றும் குர்பிரீத் சிங் (220.1) ஆகியோரை முந்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக் 2024 வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் இறுதிப்போட்டியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் 198.4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இளைய தேசிய விளையாட்டு சாம்பியன் என்ற பெருமைய பெற்றுள்ளார் அந்தோணி
சிறந்த வீரர்களுக்கு எதிராக அர்த்தமுள்ள வெற்றி
"இந்த வெற்றியால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிலுள்ள திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டது இந்த வெற்றியை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்கியுள்ளது. இந்த வெற்றிக்கான நாள் எனது நாளாக அமைந்தது. அனைத்தும் விஷயங்கள் எனக்கு ஏற்றார் போல் ஒன்றாக வந்ததில் பெருமைப்படுகிறேன்" என வெற்றிக்கு பின் அந்தோணி கூறியுள்ளார்.
முன்னதாக, தகுதிச் சுற்றில் இளம் வீரரான அந்தோணி, ஒலிம்பிக் வெற்றியாளர் செளரப் செளத்ரியை விட சிறப்பாக செயல்பட்டதார். இதன் விளைவாக பதக்க சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். இன்னர் 10ஸ் இருவரும் ஒரே புள்ளிகளை பெற்றனர். தலா 578 புள்ளிகளைப் பெற்ற நிலையில், பின்னர் நடைபெற்ற இறுதித் தொடரில் சிறந்து செயல்பட்டு டீனேஜர் அந்தோணி பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கிய இளையோர் ஒலிம்பிக்கில் தங்கம்
செளரப் செளத்ரி டோக்கியோவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்றுள்ளார். அவர் ஜூனியர் உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கம் வென்றவராகவும் உள்ளார். ISSF உலகக் கோப்பை தொடரில் பல சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) பதக்கங்களையும் செளரப் வென்றுள்ளார்.
மகளிர் பிரிவில் பதக்கங்கள்
மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் அணிக்காக மற்றொரு ஒலிம்பிக் வீராங்கனையான சிஃப்ட் கெளர் சாம்ரா 461.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
மற்றொரு பஞ்சாப் வீராங்கனையான அஞ்சும் மௌத்கில் 458.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சுரபி பரத்வாஜ் ரபோல் 448.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
"ஒலிம்பிக் தொடருக்கு பிறகு இந்த வெற்றி எனக்கு கம்பேக் ஆக அமைந்துள்ளது. ஓய்வு கூட எடுக்காமல் தொடர் பயிற்சியில் ஈடுட்டேன். இதற்கு பலன் அளிக்கும் விதமாக தற்போது தங்கம் வென்றதை சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்.
போட்டியில் எனது வழக்கத்தை நான் அப்படியே செயல்படுத்தினேன். நான் மேற்கொண்ட சின்ன வித்தியாசங்கள் ஏற்படுத்திய விளைவுகளால் வந்த இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. சிறப்பு வாய்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் உடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதும் அற்புதமான தருணம்" என்ற வெற்றி குறித்து சிஃப்ட் கெளர் சாம்ரா கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்