WPL:முடிவுக்கு வந்த மும்பையின் வெற்றி பயணம்! முதல் அடி கொடுத்த யுபி வாரியர்ஸ்
WPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றி பயணத்துக்கு த்ரில்லான வெற்றியுடன் யுபி வாரியர்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் தோல்வியை சந்திக்காத மும்பை இந்தியன்ஸ் அணியும், புள்ளிப்பட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த யுபி வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த யுபி வாரியர்ஸ் அணியினர். தனது அபார பெளலிங்கால் மும்பை அணியின் பேட்டர்களை ரன்குவிப்பில் ஈடுபட முடியாமல் கட்டுப்படுத்தினர்.
இதனால் மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 35 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 128 ரன்கள் சேஸ் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர் மும்பை பெளலர்கள். டாப் ஆர்டர் பேட்டர்களான தேவிகா வைத்யா 1, அலிசா ஹீலோ 8, கிரண் நவ்கிரே 12 ரன்களில் நடையகட்ட 30 ரன்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.