Jio Cinema:தோனி ஷாட்களின் கேமரா கோணத்தை மாற்றலாம்! ஐபிஎல்லில் புதிய அனுபவம்
IPL 2023:இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி, உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜியோசினிமாவின் டாடா ஐபிஎல் புரொமோஷனை தொடங்கி வைத்தனர். கேமர கோணங்கள் மாற்றுவது, ரீப்ளை செய்து பார்ப்பது உள்பட பல்வேறு புதுமையான அம்சங்கள் ஜியோசினிமாவில் இடம்பிடித்துள்ளன.
11 இந்திய மொழிகளில் வெளியான டாடா ஐபிஎல் விளம்பர பிரச்சாரம் வெளியிடப்பட்டுள்ளது. ஜியோசினிமாவில் டாடா ஐபில் தொடரை நேரலை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கேமரா கோணங்களை மாற்றுவது அல்லது முக்கிய தருணங்களை ரீப்ளே செய்து கண்டு மகிழலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த புதிய பரிமாற்றத்தின் மூலம் ஜியோசினிமா மிகவும் முன்னோடியாக, தொலைக்காட்சியால் வழங்க முடியாத புதுமையான அம்சத்தை டாடா ஐபில் டிஜிட்டலில் வழங்குவது இதன் சிறப்பம்சங்களாக உள்ளன.
இதன்மூலம் தோனி உள்பட உங்களுக்கு விருப்பான வீரர்கள் விளையாடும் ஷாட்களை வேறு கேமரா கோணங்களில் பார்த்து ரசிக்கலாம். அதன் ஆக்ஷன் ரிப்ளைக்களையும் மீண்டும் பார்க்கலாம்.
அத்துடன் ஸ்க்ரோலிங் (Scrolling), ஸ்வைப் செய்தல் (Swip),பெரிதாக்குதல் (Zooming) மற்றும் ஸ்க்ரப்பிங் (Scrubbing) செய்தல் போன்ற பல ஸ்கீரின் வகை அம்சங்களும் ஜியோசினிமாவில் டாடா ஐபிஎல் போட்டிகளை காணும்போது கண்டு மகிழலாம்.
இதையடுத்து டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் என்கிற பெயரில் இந்த புரொமோஷன் பிரபலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக இலவச ஸ்ட்ரீமிங், 4K ஸ்ட்ரீமிங், 12 மொழிகளில் வர்ணனை, மல்டி-கேம் பயன்முறை, 360 VR உள்பட ரசிகரின் பார்வை அனுபவத்தை உயர்த்தும் பலவேறு அற்புதமான அம்சங்களை வழங்குகிறது.
டாடா ஐபிஎல் 2023 சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
அத்துடன் இந்த சீசன் பழைய பாணியில் ஒவ்வொரு அணிகளும் 7 போட்டிகள் தங்களது சொந்த மைதானத்திலும், மீதமுள்ள 7 போட்டிகள் பிற அணிகளின் மைதானங்களிலும் விளையாடவுள்ளன. இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தின் முன்னிலைய ஜியோசினிமாவின் புதுமையான தொழில்நுட்பம் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்ப்படுகிறது.
ஜியோசினிமாவை iOS மற்றும் Android ஆகிய இரண்டு இயங்குதளங்களை கொண்ட சாதனங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாடா ஐபிஎல் குறித்த சமீபத்திய அப்டேட்களை காண ஜியோசினிமாவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் யூடியூப்பை பின்தொடரலாம்.