தமிழ் செய்திகள்  /  Sports  /  May Sports Rewind Important Sports Events In May Month

May Sports Rewind: நடாலின் சாதனை சமன், சிஎஸ்கே சாம்பியன் மேலும் விளையாட்டுச் செய்திகள்

Manigandan K T HT Tamil
May 31, 2023 06:10 AM IST

IPL 2023: இந்த மாதத்தில் மிக முக்கியமான விளையாட்டுப் போட்டியாக ஐபிஎல் இருந்தது. இதில் சிஎஸ்கே 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்தது.

மே மாத ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்
மே மாத ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்பெயினில் நடந்த மகளிர் ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மே 2- கம்பீர், கோலி மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து இருவரும் 100 சதவீதம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டது.

மே 6- ஐபிஎல் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் விராட் கோலி.

ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிந்தியா ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மே 7- ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

மே 8- ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்நாட்டு வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். இதன்மூலம், இதுவரை சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்திருந்த ஒரே வீரராக இருந்த ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மே 9- லாரியஸ் அமைப்பின் 2022 ம் ஆண்டிற்கான சிறந்த வீர் விருதை அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார்.

மே 10- அசர்பைஜானில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் ரைபிள்-பிஸ்டல் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலம் வென்றார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8வது அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

மே 14- தாய்லாந்தில் நடந்த சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் உள்பட மொத்தம் 16 பதக்கங்களை வென்றது.

மே 15- பிளே-ஆப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக தகுதி பெற்றது.

மே 16- சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

மே 21- ஆர்சிபி அணி இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

மே 22- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சர்வதேச ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் வரும் ஜூன் 13ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இந்திய ஈட்ட எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஆடவருக்கான உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் ஒரு பிரிவினர் லண்டன் புறப்பட்டனர்.

மே 23- ஐபிஎல் குவாலிஃபயர் 1 சுற்றில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய தோனி தலைமையிலான சிஎஸ்கே.

கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 1 வெண்கலம் கிடைத்தது.

மே 26- குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்.

மே 28- ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸும், குஜராத் டைட்டன்ஸும் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பைனலில் இன்று இரவு மோதுவதாக இருந்தன. ஆனால், மழை காரணமாக போட்டி மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் பிரணாய் சாம்பியன் ஆனார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ருதுராஜுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

மே 29- சிஎஸ்கே ஐபிஎல் கிரிக்கெட்டில் 5வது முறையாக சாம்பியன் ஆனது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஜடேஜா. மும்பை இந்தியன்ஸின் சாதனை சமன் செய்யப்பட்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்