தங்கம் வென்ற மனிஷா.. ஆண்டிம் வெண்கல பதக்கம் - ஆசிய மல்யுத்த சாம்பியஷிப்பில் கலக்கிய இந்தியா வீராங்கனைகள்
Asian Wrestling Championships 2025: ஜோர்டான் நாட்டில் அம்மானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மனிஷா பன்வாலா 62 கிலோ பிரிவில் தங்க பதக்கமும், ஆன்டிம் பங்கல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று சாதித்துள்ளனர்.

தங்கம் வென்ற மனிஷா.. ஆண்டிம் வெண்கல பதக்கம் - ஆசிய மல்யுத்த சாம்பியஷிப்பில் கலக்கிய இந்தியா வீராங்கனைகள்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடர் ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 30ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல்வேறு எடைப்பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவினருக்கு இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனைகளான மனிஷா பன்வாலா 62 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கம் வென்றார். இதேபோல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆன்டிம் பங்கல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடரில் இந்தியாவுக்கு பெண்கள் பிரிவில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.