ஐரோப்பா லீக் காலிறுதி: கடைசி நேரத்தில் கோல்.. லியோனைஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட் அணி
கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் மான்செஸ்டர் யுனெடெட் கால்பந்து அணியின் கோபி மைனூ மற்றும் மகுய்ரே இருவரும் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

ஐரோப்பா லீக் கால் இறுதியின் இரண்டாம் கட்ட கால்பந்து போட்டியானது நேற்று(ஏப்ரல் 17) நடைபெற்றது. அதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது 5-4 என்ற கோல் கணக்கில் இறுதி நிமிடத்தில் வென்றது.
ஐரோப்பா லீக் கால் இறுதியின் இரண்டாம் கட்ட கால்பந்து ஆட்டமானது யுனைடெட் அணி, ஒலிம்பிக் லியோனைஸ்(லியோன்) அணிக்கு இடையில் நேற்று மாலை(ஏப்ரல் 17) நடந்தது. இது ஓல்ட் டிராஃபோர்டு என்னும் இடத்தில் நடந்தது.
குறிப்பாக, ஓல்ட் டிராஃபோர்டின் நீண்ட வரலாற்றில் அதிர்ச்சியூட்டும் வெற்றியை மான்செஸ்டர் யுனைடெட் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, கூடுதல் நேரட்த்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, 5-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
கூடுதல் நேரத்திற்கு கால்பந்து போட்டி எப்படி சென்றது?:
ஏப்ரல் 17 இரவு, மான்செஸ்டர் யுனைடெட் அணி அவமானகரமான காலிறுதிப் போட்டியில் வெளியேறும் அபாயத்தில் இருந்தது. அப்போது, கோரென்டின் டோலிசோ மற்றும் நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ ஆகியோர் மானுவல் உகார்டே மற்றும் டியோகோ டாலோட்டின் கோல்களை ரத்து செய்து, போட்டியை கூடுதல் நேரத்திற்கு கொண்டு சென்றனர்.
2014-15க்குப் பிறகு ஐரோப்பிய கால்பந்து இல்லாத முதல் சீசனின் வாய்ப்பை ஹோஸ்ட்கள் எதிர்கொண்டனர்.
சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் அணியில் குறைபாடுகள் இருந்தபோதிலும், மான்செஸ்டர் யுனைடெட் அணி இறுதி வரை போராட முடியும் என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளது.
நம்பிக்கையைத்தந்த திருப்பு முனை ஆட்டம்:
குறிப்பாக, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புருனோ பெர்னாண்டஸின் 114ஆவது நிமிட ஸ்பாட்-கிக் அந்த அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. அந்த கிக்கை மான்செஸ்டர் யுனைடெட்டின் கால்பந்து வீரர் கோபி மைனூ 120ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றினார்.
யுனைடெட் மான்செஸ்டர் கால்பந்து வீரர் ஹாரி மாகுயர் அந்த நேரத்தில் தலையால் மேலும் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதிசெய்தது.
முதல் பாதியில் 10 நிமிடத்திலும் 45+1 நிமிடத்திலும் மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் அடித்தது. இரண்டாம் பாதியில் 71ஆவது மற்றும் 77ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல் அடித்து ஒலிம்பிக் லியோனைஸ் அணி கோல் அடித்து சமன் செய்தது. 77வது நிமிடத்தில் ஒலிம்பியஸ் லியோனைஸ் அணியின் டாக்லியாஃபிகோ பந்தை கோட்டிற்கு மேல் செலுத்த முடிந்தது. பின்னர் ஒரு துடிப்பான ஓனானா அதைத் தடுக்க முடியவில்லை.
அதன்பின் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளிலும் 2 கோல் அடித்து முதன்மைபெற்றது, லியோனைஸ் அணி. குறிப்பாக, 110வது நிமிடத்தில் சமநிலையை முடிவுக்குக் கொண்டுவந்தது போல் தோன்றியது. ஆனால், VAR ரிவியூவில், காசெமிரோ மீது ஃபவுல் செய்ததற்காக வழங்கப்பட்ட பெனால்டியை லியோனைஸ் அணியின் கால்பந்து வீரர் பெர்னாண்டஸ் கோலாக மாற்றி பரபரப்பை ஏற்றினார்.
புயலின் மத்தியில் மைனூ நம்பமுடியாத அமைதியைக் காட்டினார், இதனால் கோல் சமநிலைக்கு கொண்டுவந்தார். ஆனால், யுனைடெட் மான்செஸ்டர் அணியின் கால்பந்துவீரர்கள் ஹாரி மாகுயர் காசெமிரோவின் கிராஸை ஃபார் போஸ்டில் வைத்து கோல் அடித்து மறக்க முடியாத சமநிலையை ஏற்படுத்தினார்.
அதன்பின் தான், 120ஆவது மற்றும் 121ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் கோபி மைனூ மற்றும் ஹாரி மாகுயர் கோலாக மாற்றி மான்செஸ்டர் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்து பரபரப்பினை ஏற்படுத்தினர். இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது 5-4 என்ற கோல் கணக்கில் இறுதி நிமிடத்தில் வென்றது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்