Malaysia Masters Badminton: அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து, பிரனாய்
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மற்றும் நட்சத்திர வீரர் பிரனாய் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இருவரை முறையே தங்களது பிரிவில் இந்தோனேஷியா வீரர் மற்றும் வீராங்கனையை எதிர்கொள்கின்றனர்
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறு]தி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஜாங்யி மேன் மோதினர்.
இதில் சிந்து 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்தோனேசிய வீராங்கனை ஜி.துஞ்சங்வுடன் நாளை நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து பலப்பரிட்சை செய்யவுள்ளார்.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ மோதினர்.
இந்த ஆட்டத்தில் 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் பிரனாய் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு நுழைந்தார். பிரானாயும் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9